BREAKING NEWS

அதிக உறுப்பினர்கள் சேர்க்கும் திமுக கிளை நிர்வாகிகளுக்கு 8 கிராம் தங்க நாணயம்; தொண்டர்களை குஷி

அதிக உறுப்பினர்கள் சேர்க்கும் திமுக கிளை நிர்வாகிகளுக்கு 8 கிராம் தங்க நாணயம்; தொண்டர்களை குஷி

அதிக உறுப்பினர்கள் சேர்க்கும் திமுக கிளை நிர்வாகிகளுக்கு 8 கிராம் தங்க நாணயம் பரிசு வாக்குறுதிகளை அள்ளி வீசி தொண்டர்களை குஷி படுத்திய திமுக ஒன்றிய செயலாளர்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் ஒன்றியத்தில் உள்ள மதனாஞ்சேரி கிராமத்தில் 1 கோடி உறுப்பினர்கள் சேர்க்கை குறித்த ஆலோசனை கூட்டம் ஆலங்காயம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஞானவேலன் தலைமையில் நடைபெற்றது.இதில் எம்.எல். ஏக்கள் தேவராஜ், வில்வநாதன் ஆகியோர் கலந்துக் கொண்டு திமுக நிர்வாகிகள் மத்தியில் உறுப்பினர்கள் சேர்க்கை குறித்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர்.

 

அதன் பின்னர் பேசிய ஆலங்காயம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஞானவேலன் அதிகமாக உறுப்பினர்களை சேர்க்கும் கிளை நிர்வாகிகளுக்கு தன் சொந்த பணத்தில் இருந்து 8 கிராம் தங்க நாணயம்,

மேலும் அதிகமாக உறுப்பினர்கள் சேர்க்கும் கிளை நிர்வாகிகளுக்கு தலா 4 கிராம் தங்க நாணயம், திமுக நிர்வாகிகளுக்கு தலா 2 கிராம் தங்க நாணயம் பரிசு வழங்கப்படும் என்று அறிவித்தார். இதை கேட்ட திமுக தொண்டர்கள் மத்தியில் ஒரு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Share this…

CATEGORIES
TAGS