BREAKING NEWS

அதிக பாரம் ஏற்றி வந்த 6 கனரக வாகனங்களுக்கு ரூ. 2.1 லட்சம் அபராதம்: போலீசார் நடவடிக்கை!

அதிக பாரம் ஏற்றி வந்த 6 கனரக வாகனங்களுக்கு ரூ. 2.1 லட்சம் அபராதம்: போலீசார் நடவடிக்கை!

கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிக பாரத்துடன் வந்த 6 கனரக வாகனங்களுக்கு போலீசார் ரூ.2.1 லட்சம் அபராதம் விதித்தனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் விபத்துக்கள் ஏற்படாமல் இருக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். அவர் உத்தரவின்படி மாவட்டம் முழுவதும் தொடர் வாகன சோதனை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் அதிக பாரத்துடன் கனிம வளங்கள் ஏற்றி வந்த 6 கனரக வாகனங்கள் மீது மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் 2,10,000 ரூபாய் அபராதம் விதித்து கன்னியாகுமரி போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் ஜெயபிரகாஷ் நடவடிக்கை எடுத்துள்ளார்.

மேலும், விபத்துக்கள் ஏற்படாமல் இருக்க காவல்துறை எடுக்கும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. .

CATEGORIES
TAGS