அதிமுகவில் சர்வாதிகார, அராஜகப்போக்கு – ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்.

அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் தொடர்பாக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இரு தரப்பிலும் தனித்தனியே ஆலோசனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், தர்மம் மறுபடியும் வெல்லும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு அதிகரித்து வரும் நிலையில் ஓ.பன்னீர்செல்வம் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதிமுகவில் தற்போது சர்வாதிகார, அராஜகப்போக்கு நிலவி வருவதா ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவத்துள்ளார். சர்வாதிகார போக்கிற்கு எதிராக கேசவன் தீக்குளிக்க முயன்றது வேதனை அளிக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
CATEGORIES Uncategorized
