அதிமுக ஆட்சியில் வேலூர் நுகர் பொருள் வாணிப கிடங்கில் நெல் கொள்முதல் செய்தது போல போலி பில் தயாரித்து மோசடியில் ஈடுபட்ட 3 அதிகாரிகள் பணி நீக்கம்.

கடந்த அதிமுக ஆட்சியில் வேலூர் நுகர் பொருள் வாணிபக் கிடங்கில் நெல் கொள்முதல் செய்தது போல போலி பில் தயாரித்து மோசடியில் ஈடுபட்ட 3 பேர் ப ணிநீக்கம் செய்து நுகர் பொருள்
வாணிபக் கிடங்கு அதிகாரி உத்தரவு.
தமிழகத்தில் விவசாய நிலங்களில் விலையும் நெல் மாவட்டங்களில் உள்ள நுகர் பொருள் வாணிப கிடங்குகலின் மூலம் கொள்முதல் செய்யப்படுகிறது கடந்த2020 ஆம் ஆண்டில் அதிமுக ஆட்சியில்வேலூர்.திருப்பத்தூர். ராணிப்பேட்டை. திருவண்ணாமலை. மாவட்டங்களில் உள்ள நுகர் பொருள் வாணிபகிடங்கில் பணியில் இருந்த அதிகாரிகள் நெல் கொள்முதல் செய்யாமலேயே. நெல் கொள்முதல் செய்தது போன்று போலி பில் தயாரித்தும் கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகளுக்கு கமிஷன் வாங்குவதாகவூம் வந்தபுகாரின் அடிப்படையில் சிபிசிஐடி
போலீசார் விசாரணை மேற்கொண்டனர் விசாரணையில்மேற்குறிப்பிட்ட மாவட்டங்களில் நெல் கொள்முதல் மோசடியில் ஈடுபட்ட இதுவரை 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வேலூர் நுகர்பொருள் வாணிபகடங்கில் பணியாற்றி வரும் செங்கல்பட்டு சத்யா நகரை சேர்ந்த மண்டல துணை மேலாளர்.விஜயகுமார். வேலூரை சேர்ந்த சுரேஷ் பாபு. தொரப்பாடியைசேர்ந்த கனிமொழி ஆகியோர் கடந்த பத்தாம் தேதி சி பி சி ஐ டி போலீஸாரால் கைது செய்யப்பட்டனர்.கைது செய்யப்பட்ட துணை மேலாளர் விஜயகுமார். கண்காணிப்பாளர் சுரேஷ்பாபு.கனிமொழி ஆகியோர் பணி நீக்கம் வேலூர் நுகர் பொருள் வாணிபக் கழக அதிகாரிகள் தெரிவித்தனர். இதுபோன்று மோசடி வழக்கு தீவிரமடைந்துள்ளதால் மோசடியில் ஈடுபட்ட பல அதிகாரிகள் காமம் சிக்கி விடுவோம் என்ற பயத்தில் உள்ளனர்.
