அதிமுக பொதுச்செயலாளர் ஆன எடப்பாடி பழனிச்சாமி அறிவிக்கப்பட்டார். கோவில்பட்டியில் அதிமுக நிர்வாகிகள் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.
அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. இதன் மூலம் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் பொதுச் செயலாளராக அறிவிக்கப்பட்டார். இதையடுத்து தமிழகம் முழுவதும் அதிமுக கட்சியினர் வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகிறனர்.
அந்த வகையில் தூத்துக்குடி வடக்கு மாவட்டம் சார்பில் முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ அறிவுரைகளின் படி கோவில்பட்டி நகர செயலாளர் விஜய பாண்டியன் தலைமையில் நகரின் முக்கிய பகுதிகளான அண்ணா பேருந்து நிலையம் இனாம் மணியாச்சி மற்றும் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் உள்ளிட்ட பகுதிகளில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாநில பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், முன்னாள் மாவட்ட ஊராட்சி மன்ற தலைவி சத்யா,கிழக்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜ்,மேற்கு ஒன்றிய செயலாளர் அய்யாதுரை பாண்டியன், ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் பழனிச்சாமி, மாவட்ட கவுன்சிலர் பேச்சியம்மாள், ஓட்டப்பிடாரம் ஒன்றிய செயலாளர் காந்தி காமாட்சி, மாவட்ட அம்மா பேரவை பொருளாளர் அம்பிகா வேலுமணி, ஆவின் கூட்டுறவு சங்க தலைவர் தாமோதரன் , மாவட்ட வர்த்தக அணி செயலாளர் ராமர்,
மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர் சிவபெருமாள், நகர அம்மா பேரவை செயலாளர் ஆபிரகாம் அய்யாதுரை, நகர்மன்ற உறுப்பினர்கள் கவியரசன், செண்பகமூர்த்தி, மகளிர் அணி ஜெயந்தி, சுதா, சுப்புலட்சுமி, பழனி குமார், உள்ளிட்ட அதிமுக தொண்டர்கள் நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு பட்டாசுகள் வெடித்தும் பொது மக்களுக்கும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்