அந்தியூரில் சிறுமியை திருமணம் செய்து தலைமறைவாக இருந்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது.

அந்தியூர் காளியப்பா வீதியைச் சேர்ந்த சிவசக்தி 24 என்பவர் அதே பகுதியைச் சேர்ந்த 18 வயது பூர்த்தி அடையாத சிறுமியை காதலித்து திருமணம் செய்துள்ளார் சிறுமி கர்ப்பம் ஆனதை தொடர்ந்து அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு கடந்த ஏப்ரல் மாதம் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளார் அப்போது அந்த பெண் 18 வயது பூர்த்தி அடையாத சிறுமி என தெரியவந்ததை தொடர்ந்து மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரிகளுக்கு மருத்துவர்கள் தகவல் தெரிவித்தனர்.

தகவலின் பேரில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அதிகாரிகள் விசாரணை நடத்தி பவானி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர் புகாரின்பேரில் சிவசக்தி மீது கடந்த ஏப்ரல் மாதம் 25 ஆம் தேதி பவானி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்நிலையில் சிவசக்தி தலைமறைவான அதைத் தொடர்ந்து போலீசார் அவரை தேடி வந்தனர் 54 நாட்களுக்குப் பிறகு இன்று அந்தியூர் பஸ் நிலையம் பகுதியில் இருந்த சிவசக்தியை போலீசார் கைது செய்து ஈரோடு மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
