BREAKING NEWS

ஜாதி ஒழிப்பு குறித்து பள்ளி கல்லூரிகளில் பாடத்திட்டங்கள் உருவாக்க வேண்டும் மூத்த வழக்கறிஞர் மோகன் பேட்டி.

ஜாதி ஒழிப்பு குறித்து பள்ளி கல்லூரிகளில் பாடத்திட்டங்கள் உருவாக்க வேண்டும் மூத்த வழக்கறிஞர் மோகன் பேட்டி.

தஞ்சாவூர்,
சேலம் ஓமலூர் கோகுல்ராஜ் ஆணவ கொலை வழக்கில் வாதாடி குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று கொடுத்த மூத்த வழக்கறிஞர் மோகனுக்கு தஞ்சாவூரில் பாராட்டு விழா நடைபெற்றது.


தமிழ் தேசிய முன்னேற்ற கழகம் சார்பில் நடந்த பாராட்டு விழாவுக்கு பொதுச் செயலாளர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார்.
அப்போது மூத்த வழக்கறிஞர் மோகன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது.

சேலம் ஓமலூர் கோகுல்ராஜ் ஆணவ கொலை வழக்கில் வாதாடி குற்றவாளிகளுக்கு தீர்ப்பு வாங்கிக் கொடுத்துள்ளேன். பல இடர்பாடுகளுக்கு மத்தியில் இந்த தீர்ப்பு வந்துள்ளது. வழக்கை விசாரித்த துணை போலீஸ் சூப்பிரண்டு விஷ்ணுபிரியா தற்கொலை செய்தார். முன்னதாக அவர் பிறழ் சாட்சியாக மாறினார். அப்படியும் போராடி நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது. ஜாதி ஆணவக் படுகொலையைத் தடுக்க தமிழகத்தில் சிறப்பு சட்டம் இயற்றவேண்டும். இந்த சட்டத்தை தமிழக அரசே இயற்றலாம். அதற்கு சட்டத்தில் இடமுண்டு.

பள்ளி, கல்லூரி பாடத்திட்டங்களில் ஜாதி ஒழிப்பு குறித்து பாடங்களைச் சேர்க்க வேண்டும். அப்போது மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படும்.
இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது துணை பொதுச்செயலாளர் காசவளநாடு குணசேகர் மற்றும் சிலர் உடன் இருந்தனர்.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )