அந்தியூரில் துணிக்கடையில் திருடிய கொள்ளையன் கைது.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பிரம்மதேசம் புதூர் பகுதியைச் சேர்ந்தவர் கேசவன் இவர் அப்பகுதியில் துணிக்கடை நடத்தி வருகிறார்.
இந்நிலையில் கடந்த மாதம் 20ஆம் தேதி இவரது துணிக்கடையில் நள்ளிரவு 4 மணி அளவில் ஒரு வாலிபர் கடையின் பூட்டை உடைத்து துணிகளை காரில் ஏற்றிக் கொண்டிருப்பதாக வழியாக சென்றவர்கள் கேசவனுக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக கேசவன் அங்கு வந்து பார்த்தபொழுது அவரது கடையில் இருந்த சுமார் ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள துணிகள் திருட்டுப் போய் இருப்பது தெரியவந்தது இதுகுறித்து அவர் அந்தியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் புகாரின் பேரில் அந்தியூர் சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் வெங்கடாஜலபதி ஆகியோர் விசாரணை நடத்தி வந்தனர்.
விசாரணையில் கேசவனின் கடையில் திருடியது ஒரிச்சேரி புதூர் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் வயது 22 என்பதும் இவர் ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு இவர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் சுமார் 15-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்தது.
உடனடியாக சுரேஷ் மீது அந்தியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து சுரேஷை கைது செய்து பவானி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர்.
அந்தியூர் செய்தியாளர் பா.ஜெயக்குமார்.