அந்தியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கலைத் திருவிழா..!

அந்தியூர் செய்தியாளர் பா.ஜெயக்குமார்.
தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை வழிகாட்டல் படி அந்தியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கலைத் திருவிழா 2022 மிகச்சிறப்பாக கொண்டாடப் பட்டது
இந்த விழாவிற்கு அந்தியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் திருமதி பொ.பானுமதி அவர்கள் தலைமை தாங்கினார்.
இந்த விழாவில் தமிழக பாரம்பரிய கலைகளான கரகாட்டம் ஒயிலாட்டம் தேவராட்டம் மற்றும் தெருக்கூத்து மற்றும் பாவனை நடிப்பு. தப்பாட்டம், போன்ற நடன போட்டிகளும் கட்டுரை ,கவிதை, கதை மற்றும் பேச்சுப் போட்டி போன்ற மொழித்திறன் போட்டிகளும் நடைபெற்றது.
இந்நிகழ்வில் மாணவர்கள் அனைவருக்கும் மிக ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்…. பரிசு பெற்ற மாணவர்கள் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது..
இந்த நிகழ்விற்கு ஒருங்கிணைப்பாளராக நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் அ.வே.லோகநாதன் மற்றும் பள்ளியின் முதுகலை தமிழ் ஆசிரியர்களான திரு ர.சம்பத் மற்றும் சு.கந்தசாமி ஆகியோர் செயல்பட்டார்கள்.