அந்தியூர் அருகே கோவிலூர் புதுக்காடு பகுதியில் சிறுத்தை பிடிக்க வனத்துறை மூலம் கூண்டு வைக்கப்பட்டது.
ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே கோவிலூர் புதுக்காடு பகுதியில் கடந்த 15 நாட்களில் விவசாயிகள் தங்களது தோட்டத்தில் வளர்த்து வந்த நான்கு நாய்களை அருகே உள்ள வனப்பகுதியில் இருந்து வெளியேறிய சிறுத்தை கவ்வி இழுத்து சென்றதாக கூறியும் சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் உடனடியாக கூண்டு வைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.
இதனை தொடர்ந்து மாவட்ட வன அலுவலர் உத்தரவின் பேரில் சென்னம்பட்டி வனச்சரக அதிகாரி ராஜா. வனவர் சுப்பிரமணியம் வனக்காப்பாளர் கார்த்தி தலைமையில் வனத்துறையினர் இன்று புதுக்காடு பூச்சனூர் தோட்டம் பகுதியில் சிறுத்தையை பிடிக்க கூண்டு வைத்து தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
மேலும் ஏற்கனவே அப்பகுதியில் ஐந்து கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அந்தியூர் செய்தியாளர் பா.ஜெயக்குமார்.
CATEGORIES ஈரோடு
TAGS அந்தியூர்அந்தியூர் வனத்துறைஈரோடு மாவட்டம்குற்றம்சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க விவசாயிகள் கோரிக்கைதமிழ்நாடுதலைப்பு செய்திகள்முக்கிய செய்திகள்