அந்தியூர் அருகே பர்கூர் மலைப்பகுதியில் வீட்டுக்கு அருகில் உள்ள விவசாய நிலத்தில் கஞ்சா செடி வளர்த்த இருவர் கைது.

செய்தியாளர் பா.ஜெயக்குமார்.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பர்கூர் மலைப்பகுதியில் ஓசூர் மலை கிராமத்தில் பர்கூர் உதவி ஆய்வாளர் தியாகராஜன் தனிப் பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் முருகன் தலைமையில் போலீசார் ரோந்து பணி மேற்கொண்டிருந்தனர்.

அப்போது அப்பகுதியைச் சேர்ந்த கெஞ்சுமாரி (29) என்பவர் அவருக்கு சொந்தமான மக்காசோளக்காட்டில் ஒரு கஞ்சா செடியையும், அதேப் பகுதியைச் சேர்ந்த மாதேவன்(37) என்பவருக்கு சொந்தமான நிலத்தில் 6 கஞ்சா செடியையும் பயிரிட்டு வளர்த்து வந்தது தெரியவந்தது.
இதனையடுத்து அந்த 7 கஞ்சா செடிகளையும் பறிமுதல் செய்த பர்கூர் போலீசார் கெஞ்சுமாரி மற்றும் மாதேவன் ஆகிய இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்து பவானி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர்.
CATEGORIES Uncategorized
