அந்தியூர் அருகே பொது இடங்களை திறந்தவெளி கழிப்பிடமாக பயன்படுத்துவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு.

ஈரோடு மாவட்டம்,
அந்தியூர் அருகே உள்ள செல்லம் பாளையம் நடுநிலைப்பள்ளி அருகில் சாலையின் இரு புறங்களிலும் மற்றும் பேருந்து நிறுத்தம் அருகில் பர்கூர் ரோட்டில் சாலையின் இருபுறங்களையும் பொதுமக்கள் திறந்தவெளி கழிப்பிடமாக பயன்படுத்தி வருகின்றனர் இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன் துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி பொது மக்கள் குற்றம் சாட்டுகின்றனர் எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படாமல் இருக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
அந்தியூர் செய்தியாளர் பா.ஜெயக்குமார்.
CATEGORIES ஈரோடு
TAGS ஈரோடு மாவட்டம்சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூதமிழ்நாடுதலைப்பு செய்திகள்பாளையம் நடுநிலைப்பள்ளிபொதுமக்கள் திறந்தவெளி கழிப்பிடமாக பயன்படுத்தி வருகின்றனர்முக்கிய செய்திகள்