அந்தியூர் அருகே போதை மாத்திரைகளை உபயோகப்படுத்திக் கொண்டிருந்த இருவர் கைது
ஈரோடு மாவட்டம் அந்தியூரில் உள்ள சிவசக்தி நகர் பகுதியில் மூன்று இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் நின்றுகொண்டு போதை மாத்திரையை பயன்படுத்தி கொண்டு இருப்பதாக அந்தியூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.custom soccer jerseys adidas yeezy 700 nfl pro shop new nike air max 2023 jordan shoes for sale nike air max on sale mens nike air max new custom baseball jerseys nfl apparel cheap human hair wigs cheap wigs cheap lace front wigs adidas yeezy 700 mnvn custom jersey maker super bowl champions
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு போலீசார் சென்றனர், அப்போது அங்கு போதை மாத்திரைகளை உபயோகப்படுத்திக் கொண்டிருந்த இருவரை பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அந்தியூர் கண்ணப்பன் கிணற்று வீதியைச் சேர்ந்த மணிகண்டன்(23), மற்றும் தவிட்டுப்பாளையம், நஞ்சப்பா குறுக்கு விதியைச் சேர்ந்த பிரவீன் குமார் (27) என்பதும் தெரியவந்தது. இவர்கள் இருவரையும் கைது செய்த போலீசார், இவர்கள் வைத்திருந்த போதை மாத்திரைகள் இருபது, இதற்குப் பயன்படுத்திய சிரஞ்சுகள் மற்றும் ஊசி, ஒரு பைக், 2 செல்போன்களையும் பறிமுதல் செய்து, பவானி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
மேலும் இவர்கள் அளித்த தகவலின் பெயரில் போதை மாத்திரை வாங்கி கொடுத்த ஆப்பக்கூடல், சிந்த கவுண்டன்பாளையத்தை சேர்ந்த பாலாஜியை போலீசார் தேடி வருகின்றனர்.
அந்தியூர் செய்தியாளர் பா.ஜெயக்குமார்.