BREAKING NEWS

அந்தியூர் சந்தையில் கீழே கிடந்த செல்போன் மற்றும் மணி பர்சை காவல் நிலையத்தில் ஒப்படைத்த துப்புரவு பணியாளரின் நேர்மையை பாராட்டி அந்தியூர் இன்ஸ்பெக்டர் வாழ்த்து தெரிவித்தார்.

அந்தியூர் சந்தையில் கீழே கிடந்த செல்போன் மற்றும் மணி பர்சை காவல் நிலையத்தில் ஒப்படைத்த துப்புரவு பணியாளரின் நேர்மையை பாராட்டி அந்தியூர் இன்ஸ்பெக்டர் வாழ்த்து தெரிவித்தார்.

அந்தியூர் செய்தியாளர் பா.ஜெயக்குமார்.

 

ஈரோடு மாவட்டம், அந்தியூரில் கடந்த திங்கள் கிழமை சந்தை பகுதியில் மணி பர்ஸ் செல்போன் இருசக்கர வாகனத்தின் சாவி ஆகியவை கீழே கிடந்தது.

 

அதனை அப்பகுதியில் துப்புரவு பணியில் ஈடுபட்டு இருந்த அந்தியூர் பேரூராட்சி துப்புரவு பணியாளர் கோபால் என்பவர் எடுத்து வந்து அந்தியூர் காவல் நிலைய ஆய்வாளர் மோகன்ராஜ் இடம் வழங்கினார்.

 

விசாரணையில் அது தங்கப்பாளையம் பகுதியைச் சேர்ந்த கீதா என்பவரது என தெரியவந்தது இன்று கீதாவிடம் மணி பர்ஸ் செல்போன் இரு சக்கர வாகன சாவி ஆகியவை ஒப்படைக்கப்பட்டது.

 

அப்பொழுது துப்புரவு பணியாளர் கோபாலை நேற்று நேரில் அழைத்து அந்தியூர் இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் மற்றும் போலீசார் அவரது நேர்மையை பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்

 

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (1)
  • comment-avatar
    Geetha 2 years

    Thanks 🙏🙏🙏🙏🙏 Anna

  • Disqus ( )