அந்தியூர் பேரூராட்சியில் உயர்நீதிமன்றம் தீர்ப்பினை அதிமுகவினர் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.

தமிழக முன்னாள் முதல்வர் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி நிரந்தர பொதுச் செயலாளர் என்று கழக செயற்குழு பொதுக்குழுவின் முடிவின்படி அதிரடி தீர்ப்பினை உயர்நீதிமன்றம் இன்று வழங்கியுள்ளது.
இதனையடுத்து ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டத்தில் அந்தியூர் பேரூராட்சியில் முன்னாள் அமைச்சர் கே.ஏ செங்கோட்டையன் அவர்கள் அறிவுறுத்தலின் படி அந்தியூர் பேரூராட்சி 1வார்டு அதிமுக கவுன்சிலர் சரஸ்வதி விஸ்வநாதன் நகர கழக செயலாளர் மீனாட்சி சுந்தரம் அவர்களின் தலைமையில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணைச் செயலாளர் எஸ் பி பழனிச்சாமி கூட்டுறவு சங்க தலைவர் கிருஷ்ணன் எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் பார் மோகன் மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணை தலைவர் நட்ராஜ் மாத்தூர் சிவலிங்கம் தகவல் தொழில்நுட்ப நகர தலைவர் ரமேஷ் டீக்கடை துரைசாமி ராஜா மூர்த்தி பிரகாஷ் ஜம்பு மீன்கார் ராமர் மெக்கானிக் மூர்த்தி பழக்கடை மாதன் மற்றும் அதிமுகவினர் மற்றும் பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டனர்
அந்தியூர் செய்தியாளர் பா.ஜெயக்குமார்.