BREAKING NEWS

அந்தியூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு பர்கூர் காவல்துறையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அந்தியூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு பர்கூர் காவல்துறையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

செய்தியாளர் பா.ஜெயக்குமார்.

 

ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே உள்ள பர்கூர் கோவில் நத்தம் பகுதியில் செல்வம் என்கிற மாற்றுத்திறனாளியை கடந்த சில நாட்களுக்கு முன்பு சொத்து தகராறு காரணமாக அவரது வீட்டிற்குள் புகுந்து..

 

செல்வத்தின் உறவினர்கள் செல்வத்தை கை கால்களை கட்டி தூக்கி சென்று நிர்வாணப்படுத்தி உடலில் பல இடங்களில் மின்சாரம் பாய்ச்சி கடுமையாக தாக்கி கொலை செய்ய முயற்சி செய்ததாகவும்,

 

 

 செல்வத்தை தாக்கியவர்களை தடுக்கச் சென்ற அவரது மனைவி மாதேவியையும் கடுமையாக தாக்கியதாகவும் கூறி தாக்கியவர்கள் மீது சரியான சட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்ய வேண்டிய பர்கூர் காவல்துறை சாதாரண பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளுக்கு துணை சென்றதாக கூறி,

 

தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்க மாநில கட்டுப்பாட்டு குழு உறுப்பினர் வி.பி.குணசேகரன். உறுப்பினர்கள் அன்புராஜ். கணேசன். வழக்கறிஞர் கிருஷ்ணகுமார். சிபிஐ வட்டச் செயலாளர் தேவராஜ் தலைமையில் சுமார் 50க்கும் மேற்பட்ட ஆண்களும் பெண்களும் ஆர்ப்பாட்டத்தில்‌ ஈடுபட்டனர்.

 

 பின்னர் அந்தியூர் வட்டாட்சியர்(பொறுப்பு) இளஞ்செழியனிடம் மனு அளித்தனர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )