BREAKING NEWS

அந்தியூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அந்தியூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு, இன்று மாலை தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் வாழ்வாதார கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 

இந்த ஆர்ப்பாட்டத்தில் அரசு ஊழியர்களின் ஓய்வு காலத்தை இருட்டாக்கும் சிபிஎஸ் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், வாழ்வாதாரக் கோரிக்கையான பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், நிறுத்தி வைக்கப்பட்ட ஈட்டிய விடுப்பு சரண்டரை வழங்க வேண்டும், கிராம நிர்வாக அலுவலர்களுக்கு ரத்து செய்த பட்டப்படிப்பு ஊக்க ஊதியத்தை மீண்டும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது.

 

அந்தியூர் வட்ட தலைவர் முருகேசன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் வட்ட செயலாளர் வீரமுத்து பட்ட பொருளாளர் சந்தோஷ் குமார் மாவட்ட பொருளாளர் தமிழரசன் முன்னாள் வட்ட செயலாளர் விஜயகுமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

 

அந்தியூர் செய்தியாளர் பா.ஜெயக்குமார்.

Share this…

CATEGORIES
TAGS