அனுபவ நிலத்தில் அனாதை பிணத்தை புதைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க 70 வயது மூதாட்டி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்

திருவள்ளூர் மாவட்டம் மாரியம்மன் கோவில் தெரு தண்டலம் கிராமத்தில் வசிக்கும் ஏழுமலை என்பவரது மனைவி நாகம்மாள்(70) என்ற மூதாட்டி மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்துள்ளார்.
அந்த மனுவில் மூதாட்டி நாகம்மாள் கூறியுள்ளதாவது எனது முன்னோர்கள் முதல் காலம் காலமாக திருவள்ளூர் மாவட்டம் திருவள்ளூர் வட்டம் நுங்கம்பாக்கம் கிராமத்தில் அரசு புறம்போக்கு நிலத்தில் 51 சென்ட் இடத்தினை வாழ்வாதாரத்திற்காக பயிர் செய்து அதன் மூலம் வருவாய்த்து பிழைப்பு நடத்தி வருகிறோம்,
இந்த இடத்தில் திடீரென கம்மார்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த விஜயராகவன் அவரது மனைவி கவுன்சிலர் மற்றும் நுங்கம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் ஆகியோர் அனாதை பிணத்தை கொண்டு வந்து தைல மரம் பயிர் செய்திருக்கும் இடத்தில் திடீரென புதைத்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தோம் இது குறித்து அவர்களிடம் கேட்டபொழுது தகாத வார்த்தைகளால் பேசி உங்களால் முடிந்ததை பார்த்துக் கொள்ளுங்கள் அப்படித்தான் செய்வோம் என்பது போல பேசினர்,
மேலும் தைல மரத்தை உடனடியாக வெட்ட வேண்டும் என்றும் மிரட்டல் விடுகின்றனர் எனவே மாவட்ட ஆட்சியர் அவர்கள் மிரட்டும் தோணியில் பேசும் நபர்கள் மீது நடவடிக்கை எடுத்து அனுபவ இடத்தில் புதைக்கப்பட்ட அனாதை பிணத்தை அப்புறப்படுத்தி வாழ்வாதாரத்திற்காக பயன்படுத்தும் அனுபவ இடத்தில் தொடர்ந்து பயிர் செய்ய அனுமதிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.