BREAKING NEWS

அனுமதியற்ற கல் குவாரியை மூட கோரிக்கை.

அனுமதியற்ற கல் குவாரியை மூட கோரிக்கை.

ஈரோடு மாவட்டம் கோபி அடுத்த வெள்ளைய கவுண்டம்பாளையத்தில் செயல்படும் அனுமதியற்ற கல் குவாரியை மூட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் கிராம மக்கள் இன்று புகார் அளித்தனர்.

 

கிராம மக்கள் சார்பாக புகார் அளித்த மனுவில் கூறியதாவது,, கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு சுமார் 40 ஏக்கரில் கல்குவாரி ஒன்று இப்பகுதியில் செயல்படத் துவங்கியது..பூமிதான இயக்கத்தின் கீழ் பெறப்பட்ட நிலத்தில் வெடிவைத்து கருங்கற்களை எடுப்பது மக்களுக்கு பெரிதும் ஆபத்து ஏற்படுத்தும் விதத்தில் வீடுகள் மீது கற்கள் விழுந்ததால் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து குவாரி செயல்பட அரசு தடைவிதித்து சீல் வைக்கப்பட்டது.

 

தற்பொழுது மீண்டும் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இந்த குவாரி கடந்த ஒரு வாரமாக சோதனை அடிப்படையில் செயல்பட துவங்கியுள்ளது. வெடி வைத்து கற்கள் அகற்றப்படுகின்றன நிலத்தடி நீர் உறிஞ்சப்பட்டு அந்த கற்கள் அரைக்கப்பட்டு எம்சாண்ட் எனப்படும் மணல் தயாரிக்கப்படுகிறது விவசாயத்துக்காக மின் இணைப்பு கோரி அது தொழிற்சாலைக்கு பயன்படுத்துகின்றனர். எனவே இந்த குவாரியை மூட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனர்.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )