அனைத்து வருவாய் கிராமங்களில் பிஎம்-கிஸான் திட்டத்தில் பணம் பெறுவதற்கு e-kyc பதிவு செய்வதற்கு சிறப்பு முகாம் நாளை நடைபெறுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் ஷ்ரவன்குமார்,அவர்கள் தகவல்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாரங்களிலும், வருவாய் கிராமங்களில் உள்ள கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் பிஎம்-கிஸான் (PM-Kissan) திட்டத்தில் பணம் பெறுவதற்கு e-kyc பதிவு செய்வதற்கு சிறப்பு முகாம் 24. அன்று காலை 9 மணி முதல் சிறப்பு பதிவு செய்யும் முகாம் நடைபெறவுள்ளது. இம்முகாமில் தகுதியுள்ள விவசாயிகள் 14வது தவனை பணம் பெறுவதற்கு e-kyc பதிவு செய்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேலும் விவசாயிகள், பிஎம்-கிஸான் (PM-Kissan) திட்டத்தில் பணம் பெறுவது தொடர்பாக கிராம நிர்வாக அலுவலர், உதவி வேளாண்மை அலுவலர் மற்றும் உதவி தோட்டக்கலை அலுவலர்களை நேரில் சென்று சந்தித்து e-kyc பதிவு செய்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ஷ்ரவன்குமார்,அவர்கள் தெரிவித்துள்ளார்.
CATEGORIES கள்ளக்குறிச்சி
TAGS கள்ளக்குறிச்சி மாவட்டம்தமிழ்நாடுதலைப்பு செய்திகள்பிஎம்-கிஸான் திட்டம்மயிலாடுதுறை மாவட்டம்முக்கிய செய்திகள்விவசாயம்விவசாயிகள் சிறப்பு முகாம்