அனைவருக்கும் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் ஷஜீவனா குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார்.
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே அனைவருக்கும் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் 41 கோடியே 50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட 432 அடுக்குமாடி குடியிருப்புகளை மாவட்ட ஆட்சித் தலைவர் ஷஜீவனா குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் அனைவருக்கும் வீடு என்ற வீட்டு வசதி திட்டத்தின் கீழ் தேனி மாவட்டம் சின்னமனூர் நகராட்சியில் பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களுக்கு அப்பிபட்டி கிராம பகுதியில் ரூபாய் 41 கோடியே 50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட 432 குடியிருப்புகளை காணொளி காட்சி மூலம் இன்று திறந்து வைத்தார்.
அதன் தொடர்ச்சியாக தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் ஷஜீவனா குடியிருப்புக்களை பார்வையிட்டு குத்து விளக்கேற்றி திட்ட பயனாளிகளுக்கு வீட்டிற்க்கான உத்தரவு ஆணைகளை வழங்கி மரகன்றுகளை நட்டு வைத்தார்.
மேலும் இந்த விழாவில் ஊராட்சி மன்ற தலைவர் பாண்டியராஜ் மற்றும் குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஊரக வளர்ச்சி துறையினர் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.