BREAKING NEWS

அமேசிங் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அகாடமி மற்றும் சி அறக்கட்டளை சார்பாக, சிலம்ப மாணவர்களுக்கான கோடைகால பயிற்சி வகுப்பு;

அமேசிங் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அகாடமி மற்றும் சி அறக்கட்டளை சார்பாக, சிலம்ப மாணவர்களுக்கான கோடைகால பயிற்சி வகுப்பு;

திண்டுக்கல் மாவட்டம் -ஆத்தூர் ஆர்.சி இருதய நடுநிலைப்பள்ளியில் அமேசிங் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அகாடமி மற்றும் சி அறக்கட்டளை சார்பாக சிலம்ப மாணவர்களுக்கான கோடைகால பயிற்சி வகுப்பு துவங்கியது.

 

இப்பயிற்சி வகுப்பை ஆத்தூர் அரசு மருத்துவமனை நம்பிக்கை மைய ஆற்றுநர் ம.கண்ணன் துவங்கி வைத்தார். இப்பயிற்சி வகுப்பின் நடுவராகப் பங்கேற்ற மதுரை ஸ்ரீ சாய் மார்ஷியல் ஆர்ட்ஸ் சிலம்ப ஆசான்.விஜயபாஸ்கர் அவர்கள் சிலம்ப மாணவர்களின் சிலம்பாட்டத் திறனிற்கேற்ப கிரேடிங் மதிப்பெண்களை வழங்கினார்.

 

கிரேடிங் அடிப்படையில் தேர்வான சிலம்ப மாணவர்களுக்கு மருத்துவர்.ஜே.லியோன் வினோத் குமார் (சிஎம்சி மருத்துவமனை – வேலூர்) அவர்கள் சான்றிதழ் மற்றும் பதக்கங்களை வழங்கினார்.

 

இப்பயிற்சி வகுப்பிற்கான ஏற்பாடுகளை ஆத்தூர் அமேசிங் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அகாடமி ஒருங்கிணைப்பாளர். சிலம்ப ஆசான்.ம.செந்தில்குமார் செய்திருந்தார். 50க்கும் மேற்பட்ட சிலம்ப மாணவர்கள் பங்கேற்ற இப்பயிற்சி நிகழ்வில் பார்வையாளர்களாக கலந்துகொண்ட சிலம்ப மாணவர்களின் பெற்றோர்கள் சிறப்பாக தனித்திறனை வெளிப்படுத்திய மாணவர்களை கைதட்டி வாழ்த்தினர்.

Share this…

CATEGORIES
TAGS