BREAKING NEWS

அமைச்சராகிறார் உதயநிதி ஸ்டாலின்! அன்பில் மகேஷ் தலைமையில் தீர்மானம் நிறைவேற்றம்!

அமைச்சராகிறார் உதயநிதி ஸ்டாலின்! அன்பில் மகேஷ் தலைமையில் தீர்மானம் நிறைவேற்றம்!

திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி அமைச்சராவது ஏறக்குறைய உறுதியாகிவிட்டது. இன்று திருச்சியில் அமைச்சர் அன்பில் மகேஷ் நடைப்பெற்ற திமுக கூட்டத்தில், இதற்கான  தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமைச்சரவையில் விரைவில் மாற்றம் கொண்டு வரப்படும். அப்போது திருவல்லிக்கேணி, சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ.வும், இளைஞர் அணி தலைவருமான உதயநிதி ஸ்டாலின் அமைச்சர் ஆகிறார் என்பது குறித்த  தகவல் தற்போது காட்டுத்தீ போல பரவி அரசியல் களத்தில் பரபரப்பு நிலவுகிறது.

பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் நடந்த இன்றைய கூட்டத்தில், திருவல்லிக்கேணி, சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ.வும், இளைஞர் அணி தலைவருமான உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தி.மு.க. தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி கடந்த ஆண்டு பொறுப்பேற்ற போதே திருவல்லிக்கேணி, சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ.வான உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் அவருக்கு எந்த ஒரு அமைச்சர் பதவியும் அளிக்கப்படாமல் இருந்தது.

ஒவ்வொரு முறையும் இது குறித்து எதிர்பார்ப்புகளும், தகவல்களும் வந்து கொண்டிருந்த நிலையில் தற்போது உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக உள்ளார் என்பதை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி மூலமாக ஏறக்குறைய உறுதியாகி உள்ளது.

விரைவில் அமைச்சரவையில் மாற்றம் கொண்டு வரப்பட்டு எம்.எல்.ஏ. உதய நிதிஸ்டாலின் அமைச்சர் ஆவார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

உதயநிதி

கடந்த மாதம் உதயநிதி ஸ்டாலின் தனது காரின் முன்பக்கத்தில் புதிய இலட்சிணை ஒன்றை ஒட்டி இருந்தார். அதன் மூலம் அவர் விரைவில் அமைச்சர் ஆவார் என்ற செய்தி பரவி பெரும் பேச்சுப்பொருளானது குறிப்பிடத்தக்கது.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )