BREAKING NEWS

அமைச்சரின் ஆய்வின்போது மின்வெட்டு: செல்போன் வெளிச்சத்தில் கையெழுத்திட்ட மா.சுப்பிரமணியன்!

அமைச்சரின் ஆய்வின்போது மின்வெட்டு: செல்போன் வெளிச்சத்தில் கையெழுத்திட்ட மா.சுப்பிரமணியன்!

மருத்துவமனையில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்யும் போது மின்வெட்டு ஏற்பட்டதால், ஆய்வை பாதியிலேயே கைவிட்டுவிட்டு அமைச்சர் வெளியேறினார்.

 

தருமபுரி மாவட்டம், பென்னாகரத்தில் உள்ள மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார். பென்னாகரம் எம்எல்ஏ ஜி.கே.மணி, மாவட்ட ஆட்சியர் சாந்தி ஆகியோர் ஆய்வின் போது உடனிருந்தனர். அமைச்சர் ஆய்வின் போது தொடர்ச்சியாக மின்வெட்டு ஏற்பட்டது. இதையடுத்து செல்போன் வெளிச்சத்தில் மா.சுப்பிரமணியன் ஆவணங்களில் கையெழுத்திட்டார்.

 

40 நிமிடங்களுக்குள் ஐந்து முறைக்கு மேல் மின்வெட்டு ஏற்பட்டது. இதனால் விரக்தி அடைந்த மா.சுப்பிரமணியன் ஆய்வை பாதியிலேயே கைவிட்டுவிட்டு அங்கிருந்து வெளியேறினார். அப்போது செல்போன் டார்ச் மூலம் அவருக்கு வெளிச்சம் காட்டப்பட்டது.

 

கடந்த சில தினங்களுக்கு முன்பு வேலூர் பகுதியில் அமைச்சர் துரைமுருகன் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் மின்வெட்டு ஏற்பட்டது.

 

இதனால் துரைமுருகன் பாதியிலேயே நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு வெளியேறினார். இதன் காரணமாக இரண்டு மின் பொறியாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.

 

அமைச்சர்கள் கலந்து கொள்ளும் நிகழ்வின்போது தொடர்ச்சியாக மின்வெட்டு ஏற்படுவது வாடிக்கையாகிவிட்டது.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )