BREAKING NEWS

அம்முண்டியில் உள்ள வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையின் நிர்வாக குழு கூட்டம்.

அம்முண்டியில் உள்ள வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையின் நிர்வாக குழு கூட்டம்.

அம்முண்டியில் உள்ள வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையின் நிர்வாக குழு கூட்டம் ஒரு தீர்மானம் ஆங்கிலத்தில் இருந்ததால் தமிழகத்தில் ஏன் தீர்மானத்தை ஆங்கிலத்தில் இடம் பெற வைக்கிறீர்கள் தமிழில் வைக்க வேண்டுமென உறுப்பினர்கள் கோரிக்கை எல்லா தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டதாக தலைவர் அறிவிப்பு.

 

வேலூர் மாவட்டம காட்பாடி அடுத்த அம்முண்டியில் உள்ள வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையின் நிர்வாக குழு கூட்டம் தலைவர் ஆனந்தன் தலைமையில் நடைபெற்றது இதில் கூட்டுறவு சர்க்கரை ஆலையின் மேலாண்மை இயக்குநர் மீனா பிரியதர்ஷினி மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் 14 பேர் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.

 

 

இதில் ஒரு தீர்மானம் மட்டும் முழுமையாக ஆங்கிலத்தில் இருந்தது அதில் உறுப்பினர்கள் எல்லா தீர்மானமும் தமிழில் தான் இடம் பெற வேண்டும் ஒரு தீர்மானம் மட்டும் ஏன் ஆங்கிலத்தில் இடம் பெற வைத்தீர்கள் எங்களுக்கு புரியுமா நாங்கள் எல்லாம் சாதாரண ஆட்கள் ஆகவே தமிழில் தான் தீர்மானம் இடம் பெற வேண்டுமென வலியுறுத்தினார்கள் சர்க்கரை ஆலை தலைவர் ஆனந்தன் அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டதாக கூறி கூட்டத்தை முடித்தார்.

 

இதன் பிறகு மீனா பிரியா தர்ஷினி கூறுகையில் வரும் காலங்களில் தீர்மானங்கள் தமிழில் இடம் பெற நடவடிக்கை எடுப்போம் என கூறினார் கூட்டம் அமைதியாக முடிந்தது.

CATEGORIES
TAGS