அரக்கோணத்தில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் மனித சங்கிலி போராட்டம்!!
ராணிப்பேட்டை மாவட்டம்; அரக்கோணம் தாலுக்கா அலுவலகம் அருகே ஜாக்டோ ஜியோ அமைப்பினர் மனித சங்கிலி போராட்டம் நடத்தினர். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண் டும், ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும்,
சிறப்பு காலமுறை தொகுப்பு ஊதியம், மதிப்பு ஊதியம் ஆகிய வற்றை மாற்றி அனைவருக்கும் வரையறுக்கப்பட்ட கால முறை ஊதியம் வழங்கவேண்டும், மத்திய அரசில் உள்ள இடைநிலை ஆசிரியர்களுக்கு இணையான சம்பளம் வழங்க வேண்டும்.
என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இதில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்.
CATEGORIES ராணிபேட்டை
TAGS அரக்கோணம் தாலுக்கா அலுவலகம்ஜாக்டோ ஜியோ மனித சங்கிலி போராட்டம்தமிழ்நாடுதலைப்பு செய்திகள்பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண் டும்முக்கிய செய்திகள்ராணிப்பேட்டை மாவட்டம்