அரக்கோணம் அருகே தடுப்பணையில் மூழ்கி வாலிபர் பலி !!

ராணிப்பேட்டை மாவட்டம் சென்னை தண்டையார்பேட்டை பவர் ஹவுஸ் பகுதியை சேர்ந்தவர் அஜித் என்கிற மணிகண்டன் (வயது 24). எலக்ட்ரீசியன். இவர் ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலியை அடுத்த கீழ்வெங்கடாபுரத்தில் உள்ள நண்பர் வீட்டுக்கு வந்துள்ளார்.
அப்போது சம்பத்ராயன் பேட்டையில் உள்ள தடுப்பணையில் நண்பர்களுடன் குளிக்க சென்றுள்ளார். நீச்சல் தெரியாத அஜீத் ஆழமான பகுதிக்கு சென்றதால் தண்ணீரில் மூழ்கியுள்ளார். அவரை நண்பர்கள் மீட் முயன்றும் முடியவில்லை உடனடியாக இதுகுறித்து அரக்கோணம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து இரண்டு மணி நேர தேடுதலுக்கு பின்னர் அஜித்தை பிணமாக மீட்டனர்.
அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து நெமிலி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நண்பர்கள் வீட்டிற்கு வந்தவர் தண்ணீரில் மூழ்கி இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்.
