BREAKING NEWS

அரசியல் பார்வையாக திகழும் தென்காசி மக்களின் மணம் கவர்ந்த சிவ.பத்மநாதன்

அரசியல் பார்வையாக திகழும் தென்காசி மக்களின் மணம் கவர்ந்த சிவ.பத்மநாதன்

தமிழக சட்டசபை தேர்தலுக்கு சிலமாதங்களே உள்ள நிலையில் தென்காசி தெற்கு மாவட்ட முன்னாள் செயலாளர் சிவபத்மநாபன் போன்ற செயல்வீரர்களின் அனுபவத்தை முழுமையாக பயன்படுத்தும் வகையில் அவர்களுக்கு பொருத்தமான பதவிகளை கட்சி தலைமை வழங்கவேண்டுமென கட்சி தொண்டர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் விரும்புகின்றனர்.

வரும் 2026 ம் ஆண்டுதேர்தல் திமுகவிற்கு ஒரு அக்னி பரிட்சையாக இருக்கும் என்று அரசியல் நிபுணர்கள் கணிக்கின்றனர்.

திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாதக, தவெக என கிட்டத்தட்ட நான்குமுனைப் போட்டி என்ற கணிக்கப்பட்ட நிலையில் தற்போது தவெக அதிமுக கூட்டணி பக்கம் சாய்வது போல தெரிகிறது. அப்படி ஒரு நிலை ஏற்ப்பட்டால் திமுக கடும் போட்டியை சந்திக்க நேரிடும்.

தமிழகத்தில் ஒவ்வொரு தேர்தலுக்கும் கூட்டணி கணக்குகள் மாறினாலும், மூன்றாவது அல்லது நான்காவது அணிகள் எப்போதும், பிரதானமான திமுக, அதிமுக கூட்டணியின் வெற்றி தோல்விகளுக்கு காரணமாகி இருக்கின்றன.

2016 தேர்தலில் அதிமுக 40.88% வாக்குகளுடன் 136 இடங்களில் வென்று ஆட்சியை பிடித்தது. திமுக கூட்டணி 39.85% வாக்குகளுடன் 98 தொகுதிகளில் வென்று ஆட்சியை இழந்தது. இரண்டு அணிகளுக்கு இடையிலான வாக்கு வித்தியாசம் 1 சதவீதம்தான்.

அதேசமயம், மக்கள் நலக் கூட்டணி பெற்ற வாக்குகள் 6.1 சதவீதம். தனித்து போட்டியிட்ட பாமக 5.36 சதவீதம், பாஜக 2.86 சதவீதம், நாதக 1.07 சதவீதம் என வாக்குகளை பெற்றன. இதுதான் கூட்டணி கணக்கு. இதில் ஒரு சில கட்சிகள் திமுக பக்கம் போயிருந்தால் ஆட்சியே மாறியிருக்கலாம்.

2021 தேர்தலில் திமுக கூட்டணி 45.38 சதவீத வாக்குகளுடன் 159 தொகுதிகளில் வென்று ஆட்சியை பிடித்தது. அதிமுக கூட்டணி 39.71 சதவீத வாக்குகளுடன் 75 தொகுதிகளில் வென்று ஆட்சியை இழந்தது. இரு கூட்டணிகளுக்கு இடையிலான வித்தியாசம் 6 சதவீதம் தான். அந்தத் தேர்தலில் 3-வது இடம்பிடித்த நாதக பெற்ற வாக்குகள் 6.58 சதவீதம். அதேபோல், அமமுக – தேமுதிக 2.85 சதவீதமும் மநீம 2.73 சதவீதமும் வாக்குகளை பெற்றன.

வரும் 2026 தேர்தலில் திமுக அணி அப்படியே தொடர்கிறது. அதிமுக -பாஜக கூட்டணியில் இன்னும் சில கட்சிகள் இணையலாம். வழக்கம் போல நாதக தனித்து போட்டியிடுகிறது.

தவெக-வுக்கும் தனித்து போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது அந்த கட்சி பாஜக,அதிமுக கூட்டணியின் கட்டுபாட்டிற்குள் வந்துள்ளதாக கூறப்படுகிறது. எனவே திமுக வரும் 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் கடும் போட்டியை சந்திக்க நேரிடும்.

எனவே திமுக தலைமை பல்வேறு உட்கட்சி பூசலால் முக்கியத்துவம் மறுக்கப்பட்டிருக்கும் தென்காசி தெற்கு மாவட்ட முன்னாள் செயலாளர் சிவபத்மநாதன் போன்ற ஆளுமைகளுக்கு மீண்டும் பொருத்தமான பதவிகளை கொடுத்து அவர்களை முழுவீச்சில் களமிறக்க வேண்டும் என கட்சி தொண்டர்கள் விரும்புகின்றனர்.

திமுக எதிர்கட்சியாக இருந்த போது தென்காசி மாவட்டத்தில் ஆளும் அதிமுகவிற்கு சிம்ம சொப்பனமாக விளங்கியவர் சிவபத்மநாதன்.

புதிதாக அறிவிக்கப்பட்ட தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை அதிமுகவினர் தங்களின் சுயநலத்திற்க்காக ஆயிரப்பேரி கிராமத்திற்கு கொண்டு செல்ல கடும் முயற்சிகள் மேற்க்கொண்ட போது துணிச்சலாக கிளர்ந்து திமுகவினர்களை மட்டுமின்றி பொதுமக்களையும் திரட்டி தற்போது தென்காசி புதிய பஸ்ஸ்டாண்ட் அருகே மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உருவாக காரணமானவர் சிவபத்மநாதன்.

அது போல 2021ல் திமுக ஆளும் கட்சியாக வந்தவுடன் தென்காசி மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சி பணிகளும் ஜம்புநதி போன்ற திட்டங்களும் வீராணம் கால்வாய், குலைய நேரி கால்வாய் திட்டப்பணிக்கு நிதி ஒதுக்கீடு, இரட்டைகுளம் கால்வாய் திட்டம் ஆய்வு திட்ட மதிப்பிடு தயாரித்து அரசுக்கு வழங்கிடவும், பல்வேறு அரசு அலுவலங்கள் மாவட்டத்திற்கு வருவதற்க்கும், பல்வேறு திட்டபணிகளுக்கு நிதி பெற்று தந்ததற்க்கும், காரணமான இருந்தவர்.

பல்வேறு ஊர்களுக்கு புதிய வழித்தடங்களை அவர் பொறுப்பில் இருக்கும் பொழுது ஏற்பாடு செய்து கொடுத்தவர் தென்காசி மாவட்டத்தில் இருக்கிற கல்லூரிகளுக்கு கூடுதல் பாடப்பிரிவுகளை பெற்றுக் கொடுத்தவர் இப்படி அவர் பொறுப்பில் இருந்த காலங்களில் மாவட்டத்தின் தேவைகளை அறிந்து அரசின் மூலமாக செய்து கொடுத்துளள்ளார்.

தென்காசி தெற்கு மாவட்டத்தில் நீண்ட தூரம் சென்று ரேஷன் பொருட்களை பெற்று வந்த பொதுமக்களுக்காக 32 க்கும் மேற்பட்ட பகுதி நேர ரேஷன் கடை பெற்று கொடுத்து அந்தந்த ஊர் மக்கள் அந்தந்த ஊர்களில் பொருட்கள் வாங்கும் படி செய்துள்ளார் என்று பரவலாக பேசப்பட்டு வருகிறது

மேலும் அவர் பொறுப்பில் இருக்கும்போது தினமும் காலையில் மாலையிலும் நூற்றுக்கணக்கான கட்சிக்காரர்களின் தேவைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு சொல்லி அதனை நிறைவேற்றி கொடுத்தவர் என்றும் கட்சிக்காரர்கள் தேடி வந்தவுடன் அவர்கள் முன்னாலேயே சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பேசி இது முடியும் இது முடியாது என்று சொல்லக் கூடியவர் என்று பொதுமக்க மத்தியில் பேசப்பட்டு வந்தவர் இன்றும் அந்தப் பணியை செய்யக்கூடியவர்.

 

அவர்எம்.ஏ.பி.எல் பட்டத்தோடு கூர்ந்த அரசியல் ஞானம் இருந்ததால் அமைச்சர்களிடம் நெருங்கி பழகி, திறம்பட செயல்பட்டதால் தென்காசி மாவட்டம் பல்வேறு வளர்ச்சிகளை பெற்றது.

உட்கட்சி பூசல் என்பதும், அது சில நேரங்களில் கட்சி தலைமைக்கு தலைவலியை ஏற்ப்படுத்தும் என்பதும் அரசியல் கட்சிகளில் சகஜம். ஆனால் அது போன்ற காரணங்களுக்காக சிவபத்மநாதன் போன்ற ஆளுமைகளை நீண்ட காலம் புறக்கணிப்பது என்பது ஆரோக்கியமானதல்ல என்று முக்கிய திமுகவினர் கருத்து தெரிவிக்கின்றனர்.

சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் நிலையில் விரைவில் சிவபத்மநாபன் போன்றோர்களை கட்சி தலைமை அங்கீகரித்து, பொருத்தமான பதவிகளை வழங்கி திமுக வெற்றிக்கு வழிவகுக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக உள்ளது.

CATEGORIES
TAGS