BREAKING NEWS

அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பிரச்சார வாகனம் வட்டார கல்வி அலுவலர் கொடிசைத்து துவக்கி வைத்தார்.

அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு  பிரச்சார வாகனம் வட்டார கல்வி அலுவலர் கொடிசைத்து துவக்கி வைத்தார்.

ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி ஒன்றியத்தில் உள்ள அரசு பள்ளிகளில் வரும் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க பல்வேறு நடவடிகளை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி இன்று திமிரி அடுத்த காவனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் இருந்து விழிப்புணர்வு வாகனம் புறப்பட்டது.

 

விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு வட்டார வளமைய மேற்பார்வையாளர் குமரேசன் முன்னிலை வகித்தார், விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை வட்டார கல்வி அலுவலர் பொறுப்பு விஜயா கொடிசைத்து துவக்கி வைத்தார். தொடர்ந்து அந்த வாகனம் வீதி வீதியாகவும், கிராம பகுதியை சுற்றி சென்ற போது அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் குறித்து ஆசிரியர்கள் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

 

அதேபோல் திமிரி சஞ்சீவராயன் பேட்டை, பக்திக்காரன்பட்டி, தாமரைப்பாக்கம், மோசூர், மற்றும் பெருமாந்தாங்கல் ஆகிய ஊராட்சிகளில் ஐந்து வயது நிறைந்த குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்க்கை விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

 

நிகழ்ச்சியில் பள்ளியில் சேர்ந்த மாணவர்களுக்கு தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு சந்தனம் பூசி, பூ மாலை அணிவித்து, வரவேற்பு மாணவர்களுக்கு சிலேட் மற்றும் இனிப்புகளை வழங்கி வரவேற்றனர். இந்த விழிப்புணர் நிகழ்ச்சியில் வட்டார வளமை ஆசிரியர் பயிற்றுநர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், பொதுமக்கள் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Share this…

CATEGORIES
TAGS