அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, ரிஷிவந்தியம். மாணவர் சேர்க்கை (வராண்டா அட்மிஷன்) கலந்தாய்வு,

கள்ளக்குறிச்சி மாவட்டம்;அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2023-2024 ஆம் கல்வியாண்டுக்கான முதலாமாண்டு இளநிலை பாடப்பிரிவுகளுக்கு மாணவர் சேர்க்கை மே 29 ஆம் தேதி துவங்கப்பட்டு மாணவர் சேர்க்கை நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
இது குறித்து கல்லுாரி முதல்வர் முனைவர் இல.இரேவதி கூறியதாவது
2023-2024 ஆம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு காலியாக உள்ள இடங்களை நிரப்ப அரசு அனுமதியுடன் இணைய தளத்தில் பதிவு செய்யாத மாணவர்களும் பயன்பெறும் வகையில் ஜீன் 19 ஆம் தேதி முதல் நேரடி மாணவர் சேர்க்கை(வராண்டா அட்மிஷன்) நடைபெற உள்ளது. எனவே இணைய தளத்தில் பதிவு செய்யாத மாணவர்கள் தெரிவிக்கப்படுகிறது. பயன்பெறுமாறு
ஜீன் 19ஆம் தேதி புள்ளியியல் மற்றும் கணினிஅறிவியல் பாடப்பிரிவுகளுக்கும் ஜீன் 20ஆம் தேதி வணிகவியல் மற்றும் பொருளியல் பாடப்பிரிவுகளுக்கும் ஜீன் 21ஆம் தேதி தமிழ் இலக்கியப் பாடப்பிரிவுக்கும் கலந்தாய்வு நடைபெற உள்ளது.
மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வில் கலந்து கொள்ளும் மாணவர்கள் 10ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், 11 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், 12 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச்சான்றிதழ், வகுப்பு சான்றிதழ், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் வருமானச் சான்றிதழ் போன்றவைகளோடு பெற்றோரையும் கட்டாயம் அழைத்து வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு கல்லுாரி முதல்வர் அவர்கள் தெரிவித்தார்.