BREAKING NEWS

அரசு டாஸ்மார்க் மதுக்கடைகளில் ஒரு மது பாட்டிலுக்கு ரசீது போடாமல் 10 ரூபாய் கூடுதலாக அடாவடியாக வசூலிக்கின்றனர் பொதுமக்கள் குற்றச்சாட்டு.

அரசு டாஸ்மார்க் மதுக்கடைகளில் ஒரு மது பாட்டிலுக்கு ரசீது போடாமல் 10 ரூபாய் கூடுதலாக அடாவடியாக வசூலிக்கின்றனர் பொதுமக்கள் குற்றச்சாட்டு.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் தாலுகாவில் அரசு டாஸ்மார்க் மதுக் கடைகளில் ஒரு மது பாட்டிலுக்கு ரசீது போடாமல் 10 ரூபாய் கூடுதலாக அடாவடியாக வசூலிக்கின்றனர்.

 

என்று பல தரப்பினரின் புகாரை அறிந்த பத்திரிகையாளர்கள் சென்று டாஸ்மார்க் ஊழியர்களிடம் கேள்வி கேட்டபோது அவர்கள் தகுந்த பதில் அளிக்காத நிலையில்,

 

நிருபர்கள் மாவட்ட டாஸ்மார்க் நிர்வாகத்திற்கு புகார் அளித்திருந்த நிலையில் ஒட்டன்சத்திரம் பகுதியல கடமைக்கு் , சில கடைகளை மட்டும் ஆய்வு செய்த மாவட்ட அதிகாரிகள் பல கடைகளை ஆய்வு செய்யாமல் போன மர்மம் என்ன?

 

கூடுதலாக வசூலிக்கும் ரூ 10 ல் பங்கு பெறும் நபர்கள் யார்? யார்? என வெள்ளை அறிக்கை வெளியிடப்படுமா?

 

போலி பத்திரிக்கையாளர்கள் என்று கூற இவர்களுக்கு அதிகாரம் வழங்கியது யார்?

 

பள்ளி மற்றும் கல்லூரி அருகே சிகரெட், பீடி கூட விற்க கூடாது என முதல்வர் உத்திரவு பிறப்பித்த நிலையில் மதுக்கடை 24 மணி நேரமும் வைக்க அனுமதி வழங்கியது யார்??

 

இது போன்ற பல கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாத சூழ்நிலையில், ஒட்டன்சத்திரம் டாஸ்மாக் ஊழியர்களும் மாவட்ட டாஸ்மாக் நிர்வாகமும் இதனை தட்டி கேட்ட பத்திரிக்கையாளர்களை போலி பத்திரிக்கையாளர்கள் என்று விமர்சனம் புகார் செய்து வருகின்றனர். இது எந்த வகையில் நியாயமாகும்.

 

 பொதுமக்கள் கொடுக்கும் தகவலின் பெயரில் பத்திரிக்கையாளர்கள் சென்று கேள்வி கேட்கும் போது அதற்கு தகுந்த பதில் அளிக்காமல், அவர்கள் மீது பொய்யான தகவல்களை கூறி தாங்கள் நியாயவாதிகள் என்று டாஸ்மார்க் ஊழியர்கள் நடந்து கொள்வதை பார்த்தால்இவர்களுக்கு மாவட்ட நிர்வாகமே முழு ஒத்துழைப்பு கொடுப்பதாக தெரிய வருகிறது.

 

மேலும் குறிப்பிட்ட சிலபத்திரிக்கையாளர்கள் பெயரை பயன்படுத்தி அவர்கள் போலி நிருபர்கள பணம் கேட்டு மிரட்டுகின்றனர்.

 

 

என்று கூறி வரும் டாஸ்மார்க் ஊழியர்களின் ஒட்டுமொத்த புகாரையும் ஆராய்ந்தால் ஒட்டன்சத்திரத்தில் மட்டும் தினந்தோறும் அரசு விலையை விட அதிகமான விலைக்குவிற்று நாள்தோறும் பல லட்சங்களை பார்ப்பது மட்டுமல்லாமல்,

 

போலி மதுபானங்கள் மற்றும் அவைகளை 24 மணி நேரமும் விற்பனை செய்ய அடியாட்களை வைத்திருப்பதும் நிருபர்கள் வெளியில் சொல்லி விடுவார்களோ என்ற அச்சத்தில் குறிப்பிட்ட சில பத்திரிக்கையாளர்கள் மீது மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்திருப்பது வேதனை கூறியதாகும்.

 

 மேலும் பத்திரிக்கையாளர்களுக்கு எந்தப் பாதுகாப்பும் இல்லை என்பது போல் உள்ளது. இதே நிலை நீடித்தால் போலி பத்திரிக்கையாளர்கள் என்று டாஸ்மார்க் ஊழியர்களால் சொல்லப்பட்ட பாதிக்கப்பட்ட பத்திரிக்கையாளர்கள் ஒன்று சேர்ந்து நுகர்வோர் நீதிமன்றத்தில் மான நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர வேண்டும் என்கின்றனர். விவரம் தெரிந்த சமூக ஆர்வலர்கள்.

 

ஆகவே இனியும் டாஸ்மார்க் கடைகளில் இதுபோன்ற கொள்ளையடிக்கும் சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க, மாவட்ட ஆட்சியர் அவர்கள் உடனடியாக தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

 டாஸ்மார்க் ஊழியர்கள் பத்திரிக்கையாளர்கள் மீது கொடுத்த புகாரை வாபஸ் பெற வேண்டும் என்பதே பலதரப்பு மக்களின் கருத்தாக உள்ளது.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )