BREAKING NEWS

அரசு நடுநிலைப்பள்ளியில் நடந்த மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி; அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.

அரசு நடுநிலைப்பள்ளியில் நடந்த மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி; அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.

திருவெறும்பூர் அருகே துவாக்குடி மலை அரசு நடுநிலைப்பள்ளியில் நடந்த மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணியை தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.

 

மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி தலைமை வகித்தார். மாவட்ட கல்வி அலுவலர் பேபி முன்னிலை வைத்தார். தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவ மாணவிகளின் விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்து பேசியதாவது.

 

2023 மற்றும் 24 ஆம் ஆண்டு புதிய மாணவர்கள் சேர்க்கை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த துவாக்குடி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் தொடங்கி உள்ளது பெருமை

அரசு பள்ளியில் ஏன்மாணவ மாணவவிகளை சேர்க்க வேண்டும் என்பதை மாணவ மாணவிகள் ஏந்தி உள்ள பதாகைகள் மூலம் வெளிச்சம் போட்டு காட்டுவதாகவும் கடந்த ஆண்டு 11 லட்சம் மாணவ மாணவிகள் அரசு பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும்,

 

 

இது தமிழக அரசு மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையை காட்டுவதாகவும் அடுத்த ஆண்டு மாணவர் சேர்க்கை விழிப்பு உணர்வு 7.5 சதவீதம் அரசு பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு மருத்துவ கல்வியில் மட்டும் இல்லாமல் வேலை வாய்ப்புகள் இட ஒதுக்கீடு மற்றும் 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை ஒவ்வொரு பாடத்திற்கும் ஒரு ஆசிரியர், கல்வியன் முக்கியத்துவத்தை உணர்ந்து விலையில்லா பொருட்கள் வழங்கப்படுவதாகவும்,

 

அதனால் 5 வயது நிரம்பிய குழந்தைகளை பள்ளியில் சேர்க்கப்படாமல் இருந்தால் அவர்களை சேர்ப்பதற்கு ஒவ்வொரு பெற்றோரும் மற்றவர்களும் தூதுவர்களாக செயல்பட வேண்டும் என்றார்

சட்டமன்ற வரலாற்றிலேயே இந்த முறைதான் கல்வித்துறைக்கு 40 ஆயிரத்து 299 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும்,

 

இது வேளாண்துறை தனி பட்ஜெட் ஆக தாக்கல் செய்யப்படுவதற்கு கூட இவ்வளவு நிதி ஒதுக்கப்படவில்லை என்று தமிழக முதல்வருக்கு மருத்துவம் மற்றும் பள்ளி கல்வி இரு கண்கள் என்றும் அதற்கு என்னென்ன திட்டங்கள் செயல்படுத்தலாம் என சிந்தித்து வருவதாகவும் அரசு பள்ளியில் பெற்றோர்கள் மாணவ மாணவிகளை சேர்ப்பதற்கு குறித்து உள்ள சந்தேகங்களை தீர்த்துக் கொள்ள வேண்டும் தனியார் பள்ளியில் சேர்த்து விட்டால் கவலை இல்லாமல் இருக்கலாம் என நினைப்பது தவறு இல்லை.

 

இதுநாள் வரை அரசு பள்ளி எப்படி இருந்தது தற்பொழுது அரசு பள்ளி வறுமையின் அடையாளமாக இல்லாமல் பெருமையின் அடையாளமாக உள்ளது.

எனவே அரசு பள்ளியில் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை சேர்க்க வேண்டும் என கூறினார்.

 

 

பள்ளி தலைமையாசிரியர் கருணாம்பாள் கூறியதாவது;
இந்த விழிப்புணர்வு பேரணியில் துவாக்குடி வடக்கு மலை நடுநிலைப் பள்ளியில் பயிலும் மாணவிகள் மாணவ மாணவிகளுக்கு விலை இல்லா பாடநூல்கள், குறிப்பேடுகள் சீருடைகள் எழுதப் பொருட்கள், புத்தகப்பை, காலனி, சத்துணவு, கணினி வழி கல்வி, ஆங்கில புலமை பயிற்சி, தையல் பயிற்சி,

 

ஓவிய பயிற்சி, சிலம்ப பயிற்சி மற்றும் ஒன்றாம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை தமிழ் வழி மற்றும் ஆங்கில வழி கல்வி, ஒன்றாம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை வகுப்புக்கு ஒரு ஆசிரியர் 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை பாடத்திற்கு ஒரு ஆசிரியர் என சிறப்பு அம்சங்கள் உள்ளதாக கூறினார்.

முன்னதாக திருவெறும்பூர் வட்டார கல்வி அலுவலர் ரெஜி பெஞ்சமின் நன்றி கூறினார்.

CATEGORIES
TAGS