BREAKING NEWS

“அரசு நிலத்தை அபகரிக்கும் முயற்சியில் திமுக கிளை நிர்வாகி.. மந்திரி ஆர்.காந்தி கண்டிப்பாரா!

“அரசு நிலத்தை அபகரிக்கும் முயற்சியில் திமுக கிளை நிர்வாகி.. மந்திரி ஆர்.காந்தி கண்டிப்பாரா!

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் வட்டம், அன்வர்திகான்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் நிஷார் இவர் திமுகவில் கிளைச் செயலாளராக உள்ளார். இந்தநிலையில், அதே கிராமத்தில் அரசுக்கு சொந்தமான இடத்தினை அவர், கிராம நிர்வாக அலுவலர்(VAO) உதவியுடன் சிமெண்ட் சீட்டினை நட்டு அந்த நிலத்தினை அபகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

அதிகார துஷ்பிரயோகம் நடவடிக்கையில் ஈடுபடும் அவர் மீதும், அதற்கு உடந்தையாக இருக்கும் கிராம நிர்வாக அலுவலர் மீதும் மாவட்ட நிர்வாகமும், வருவாய்த்துறை அதிகாரிகளும் தகுந்த நடவடிக்கை மேற்கொண்டு, கள ஆய்வினை செய்து அந்த இடத்தை பாதுகாக்குமாறும் இனி இதுப்போன்று நடைபெறா வண்ணம் அரசு நிலத்தை பாதுகாக்க சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

எனவே மாவட்ட ஆட்சியர் Dr. J.U.சந்திரகலா, இ.ஆ.ப. அவர்கள். இதுகுறித்து தீர விசாரணை நடத்தி அரசு இடத்தை மீட்டெடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Share this…

CATEGORIES
TAGS