BREAKING NEWS

அரசு பள்ளி மாணவர்களுக்கு அழைத்துச் செல்ல ஆட்டோ வழங்கிய ஊராட்சி மன்ற தலைவர் சித்ரா ரவிச்சந்திரன்.

அரசு பள்ளி மாணவர்களுக்கு அழைத்துச் செல்ல ஆட்டோ வழங்கிய ஊராட்சி மன்ற தலைவர் சித்ரா ரவிச்சந்திரன்.

ஆரியசேரி
அரசு பள்ளி மாணவர்களுக்கு அழைத்துச் செல்ல ஆட்டோ வழங்கிய ஊராட்சி மன்ற தலைவர் சித்ரா ரவிச்சந்திரன்.

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூர் ஒன்றியம் ஆரியசேரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆரியசேரி கிராமத்தைச் சுற்றியுள்ள கீரனூர் செம்மங்குடி உள்ளிட்ட சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து மாணவ மாணவியர்கள் ஏராளமானோர் படித்து வருகின்றனர்.

இந்நிலையில் மேற்படி கிராமங்களுக்கு போக்குவரத்து வசதி இல்லாத காரணத்தினால் பள்ளி மாணவர்கள் பள்ளிக்கு வருவது சிரமம் ஏற்பட்டது அவர்கள் சரியான நேரத்திற்கு பள்ளி வருவதற்கும் மாணவர்களுக்கு உதவியாக தொலைதூரத்தில் உள்ள கிராமங்களில் இருந்து வந்து செல்வதற்கு ஆரியசேரி ஊராட்சி மன்ற தலைவரும் பள்ளி மேலாண்மை குழு தலைவருமான சித்ரா ரவிச்சந்திரன் தனது சொந்த செலவில் ஆட்டோ ஏற்பாடு செய்து பள்ளிக்கு வழங்கினார்.

இதனால் தொலை தூரத்தில் உள்ள மாணவர்கள் சரியான நேரத்திற்கு பள்ளிக்கு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது மாணவர்களை அழைத்துச் செல்லும் ஆட்டோவை பள்ளிக்கு ஒப்படைக்கும் தொடக்கவிழா பள்ளியில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமையாசிரியர் ந.மேகலா அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.

வட்டாரக் கல்வி அலுவலர்கள் பேபி, செல்வி நிவேதா மற்றும் வட்டார வளமைய மேற்பார்வையாளர் .

மு.பாக்கியராஜ் ஆசிரியர் பயிற்றுநர் இரா.சுரேஷ் ஆகியோர் வாழ்த்தியும் பாராட்டியும் பேசினார்கள். பள்ளியின் ஆசிரியர்கள் நிகழ்ச்சி ஏற்பாடுகளைச் செய்தனர்.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )