அரசு பஸ்சில் பலத்த மழை; நின்றவாறு நனைந்து கொண்டே பயணித்த பயணிகள்.
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்.
அரசு பஸ்சிற்குள் விழுந்த மழைநீர் – நின்று கொண்டே பயணித்த பயணிகள் – பலமுறை சொல்லியும் நடவடிக்கை இல்லை புலம்பிய அரசு பஸ் நடத்துனர் – வைரலாகும் வீடியோக்கள்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டிக்கு பசுவந்தனையில் இருந்து வந்த அரசு பஸ்சில் மேற்கூரையில் ஆங்கங்கே இருந்த ஓட்டையின் வழியாக மழைநீர் உள்ளே வந்தால் இருக்கை முழுவதும் நனைந்து பயணிகள் அமர முடியமால் நின்று கொண்டே பயணித்தனர்.
மக்கள் ஓசியில் பயணம் செய்யவில்லை, நிர்வாகத்திடம் பலமுறை கூறியும் நடவடிக்கை இல்லை என்று நடத்துனர் புலம்பியுள்ளார்.
இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கோவில்பட்டிக்கு பசுவந்தனையில் இருந்து தினமும் இரவில் அரசு பஸ் ஒன்று வருவது வழக்கம்.வழக்கம் போல் அந்த அரசு பஸ் இரவு பயணிகளை ஏற்றிக்கொண்டு வந்தது. பசுவந்தனை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் மழை பெய்துள்ளது.
இந்நிலையில் அரசு பஸ்சின் மேற்கூரையில் ஆங்கங்கே லேசான ஓட்டைகள் இருந்த காரணத்தினால் மழைநீர் பஸ்சிற்குள் விழுந்துள்ளது. பஸ்சில் மழைநீர் விழுந்து இருக்கைகள் முழுவதும் நனைந்தால் பஸ்சில் பயணித்த பயணிகள் இருக்கையில் அமர முடியமால் நின்று கொண்டே பயணித்து வந்தனர்.
மேலும் மக்கள் யாரூம் ஓசியில் வரவில்லை, பலமுறை நிர்வாக திடம் சொல்லியும் மேற்கூரையில் உள்ள ஓட்டைகளை அடைக்க நடவடிக்கை எடுக்கவில்லை என அந்த அரசு பஸ் நடத்துனர் புலம்பும் வீடியோக்கள் சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.