அரசு பொது மருத்துவமனை படுக்கைகளுடன் தரம் உயர்த்தப்பட்ட கட்டிடம் கட்டுவதற்கு அமைச்சர்கள் மா சுப்பிரமணியன், ஆர் ராமச்சந்திரன் அடிக்கல் நாட்டினர்.
ராஜபாளையம் அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் ₹. 40 கோடி மதிப்பீட்டில் 227 படுக்கைகளுடன் தரம் உயர்த்தப்பட்ட மருத்துவமனை கட்டிடம் கட்டுவதற்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா , வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே கே எஸ் ஆர் ராமச்சந்திரன் அடிக்கல் நாட்டினர் – மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன், தென்காசி எம்பி தனுஷ்குமார் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்பு.
சுப்பிரமணியன் அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேச்சு.
தமிழகத்தில் உள்ள மாவட்ட தலைமை மருத்துவமனைகளின் எண்ணிக்கை 18. திமுக தலைமையிலான ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்ற 22 மாதங்களில் புதியதாக 25 மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகள் உருவாக்கப்பட்டுள்ளது.
இதற்கு முதல்வர் 1,038 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் மற்றும் எம்எல்ஏ தங்கப்பாண்டியன் முயற்சியின் காரணமாக இந்த மாவட்டத்தில் இரண்டு மாவட்ட தலைமை மருத்துவமனைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
உழைக்கும் வர்க்கத்தினர் அதிகம் உள்ள மாவட்டமாக விருதுநகர் உள்ளதால் இரண்டு மருத்துவமனைகள் மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த அரசு மருத்துவமனையில் முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் பயன்பெறும் பயனாளிகளின் எண்ணிக்கை என்பது கடந்த 2 ஆண்டுகளில் 2 மடங்காக உயர்ந்துள்ளது.
தமிழகத்திலேயே காப்பீட்டு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தும் மருத்துவமனையாக ராஜபாளையம் அரசு மருத்துவமனை உள்ளது. மேலும் தமிழக அரசின் இன்னுயிர் காப்போம் நம்மை காக்கும் 48 என்ற திட்டமும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட நபர்கள் உயிர் பிழைத்துள்ளனர்.
1 லட்சம் சதுர அடியில் கட்டப்பட உள்ள புதிய கட்டடத்தில் கூடுதலாக 277 படுக்கை வசதிகள் மற்றும் எலும்பு அறுவை சிகிச்சை வசதிகள் செய்யப்பட உள்ளது.
ம.வெள்ளானைப்பாண்டியன் ராஜபாளையம்.