அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படித்து வரும் மாணவ, மாணவிகளுக்கு புத்தக பை டிசம்பர் மாதம் இறுதிக்குள்ளும், காலணி நவம்பர் முதல் வாரத்திற்குள்ளும் வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்..மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.

தஞ்சையில் உள்ள அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளியில் இலவச மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்வில், பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில்.மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு, இலவச மிதிவண்டிகளை வழங்கினார் பின்னர் அளித்த பேட்டியில் தஞ்சையில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பன்னிகளில் படிக்கும் 2488 மாணவ, மாணவிகளுக்கு ஒரு கோடியே 25 லட்சம் ரூபாய மதிப்பீட்டில் மிதிவண்டிகள் வழங்கப்படுவதாக தெரிவித்த அவர் புத்தகப்பை டிசம்பர் மாதம் இறுதிக்குள்ளும், காலணி நவம்பர் மாதம் முதல் வாரத்திற்குள்ளும் வழங்கப்படும் என்றார்.
அடுத்த ஆண்டு பள்ளிகள் திறந்தவுடன் ஜூன் மாதம் இறுதிக்குள் வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 2381 அங்கன்வாடி பள்ளிகளில் 54381 பேர் எல்.கே.ஜி வகுப்புகளில் சேர்ந்துள்ளனர். இருக்கும் ஆசிரியர்களை வைத்து சிறப்பாக வகுப்புகள் செயல்படுகிறது என அமைச்சர் அன்பில், மகேஷ் தெரிவித்தார்.

