அரியலூர் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்ப முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா.ஆனிமேரி ஸ்வர்ணா அறிப்பு.

அரியலூர் மாவட்டத்தில், கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்ப முகாம்கள், முதல் கட்டமாக 24.07.2023 முதல் 04.08.2023 வரை அரியலூர் மற்றும் செந்துறை வட்டங்களில் 237 நியாய விலைக் கடைப்பகுதிகளில் விண்ணப்பப் பதிவு முகாம்கள் நடத்தப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டது.
மேலும் இரண்டாம் கட்டமாக 05.08.2023 முதல் 16.08.2023 வரை ஜெயங்கொண்டம் மற்றும் ஆண்டிமடம் வட்டங்களில் 229 நியாய விலைக் கடைப்பகுதிகளில் விண்ணப்ப முகாம்கள் நடைபெற கால அட்டவணை வெளியிடப்பட்டது.அதன்படி 05.08.2023 முதல் நடைபெற்ற முகாம்களில் இதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது. இதில் விடுபட்டவர்களுக்கான சிறப்பு விண்ணப்பப் பதிவு முகாம்கள் 19.08.2023 மற்றும் 20.08.2023 சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடத்தப்பட உள்ளது.
முதல் கட்ட விண்ணப்பப் பதிவு நடைபெற்ற அனைத்து இடங்கள் மற்றும் இரண்டாம் கட்ட விண்ணப்பப்பதிவு நடைபெற்ற அனைத்து இடங்களிலும் 19.08.2023 மற்றும் 20.08.2023 ஆகிய நாட்களில் விடுபட்டவர்களுக்கான சிறப்பு: முகாம்கள் நடைபெற உள்ளது.
எனவே, மாவட்டத்தில் உள்ள விடுபட்ட விண்ணப்பதாரர்களும் இரண்டு நாள் நடைபெறும் சிறப்பு முகாம்களில் தங்களது விண்ணப்பங்களை அளித்து பதிவு செய்து கொள்ளுமாறு அரியலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் .ஜா.ஆனிமேரி ஸ்வர்ணா அவர்கள் தெரிவித்துள்ளார்.