அரியலூர் மாவட்டத்தில் ரூ.78.03 கோடி மதிப்பீட்டில் 10 புதிய வளர்ச்சித் திட்டப் பணிகள்-அமைச்சர் சா.சி.சிவசங்கர் துவக்கி வைத்தார்.
அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் ஒன்றியத்தில் ரூ.78.03 கோடி மதிப்பீட்டில் 10 புதிய வளர்ச்சித் திட்டப் பணிகளை போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் அவர்கள் துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா தலைமையில் நடைபெற்றது ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் முன்னிலை வகித்தார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழக மக்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் இன்றைய தினம் அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சித் துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறையின் சார்பில் பல்வேறு புதிய வளர்ச்சித் திட்டப்பணிகளுக்கு மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள் துவக்கி வைத்தார்.
இதில் ஆண்டிமடம் ஒன்றியம், மருதூர் ஊராட்சியில் நெடுஞ்சாலைத்துறை – நபார்டு மற்றும் கிராம சாலைகள் அலகு சார்பில் ஊராட்சி ஒன்றிய சாலைகளை இதர மாவட்ட சாலைகளாக தரம் உயர்த்துதல் திட்டத்தின் கீழ் ரூ.340.00 இலட்சம் மதிப்பீட்டில் மருதூர் – நாகல்குழி சாலை வரை தரம் உயர்த்துதல் பணியினை துவக்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து, ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் ரூ.34.67 இலட்சம் மதிப்பீட்டில் 1 கி.மீ நீளத்திற்கு மருதூர் தெற்குப்பட்டி சாலை அமைக்கும் பணியினையும்;, கொடுக்கூர் ஊராட்சியில் ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.222.86 இலட்சம் மதிப்பீட்டில் 2.63 கி.மீ நீளத்திற்கு கொடுக்கூர் – பொன்பரப்பி சாலை அமைக்கும் பணியினையும், வல்லம் ஊராட்சியில் ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.78.62 இலட்சம் மதிப்பீட்டில் 1.85 கி.மீ நீளத்திற்கு வல்லம் – அய்யூர் சாலை அமைக்கும் பணியினையும் துவக்கி வைத்து பணிகளை தரமான கட்டுமானப் பொருட்களை கொண்டு விரைவில் முடித்திட சம்மந்தப்பட்ட அலுலர்களுக்கு அறிவுறுத்தினார்.
அதனைத் தொடர்ந்து, தெற்கு நத்தம் கிராமத்தில் ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.137.21 இலட்சம் மதிப்பீட்டில் 3.56 கி.மீ நீளத்திற்கு குளத்தூர் – அய்யூர் சாலை அமைக்கும் பணியினையும், தேவனூர் ஊராட்சியில் நெடுஞ்சாலைத்துறை – நபார்டு மற்றும் கிராம சாலைகள் அலகு சார்பில் ஊராட்சி ஒன்றிய சாலைகளை இதர மாவட்ட சாலைகளாக தரம் உயர்த்துதல் திட்டத்தின் கீழ் ரூ.541.00 இலட்சம் மதிப்பீட்டில் ஆண்டிமடம் – தேவனூர் – வாரியங்காவல் சாலை முதல் குவாகம் வரை தரம் உயர்த்துதல் பணியினையும், வாரியங்காவல் ஊராட்சியில் ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.36.60 இலட்சம் மதிப்பீட்டில் 0.66 கி.மீ நீளத்திற்கு J.S சாலை – விருத்தாசலம் ராஸ்தா தெரு வரை சாலை அமைக்கும் பணியினையும், வடுகர்பாளையம் உடையார் தெருவில் ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.86.71 இலட்சம் மதிப்பீட்டில் 2.25 கி.மீ நீளத்திற்கு வடுகர்பாளையம் உடையார் தெரு சாலை அமைக்கும் பணியினையும் துவக்கி வைத்து பணிகளை மழைக்காலம் ஆரம்பிக்கும் முன்னதாக விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவர சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
பின்னர், குடிகாடு கிராமத்தில் ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.123.93 இலட்சம் மதிப்பீட்டில் 2.18 கி.மீ நீளத்திற்கு J.V சாலை – குடிகாடு சாலை அமைக்கும் பணியினையும், கூவத்தூர் ஊராட்சியில் நெடுஞ்சாலைத்துறை (கட்டுமானம் மற்றும் பராமரிப்பு) சார்பில் முதலமைச்சர் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.62 கோடி மதிப்பீட்டில் விருத்தாசலம் – கும்பகோணம் சாலை (பகுதி – II) அமைக்கும் பணி துவக்கி வைத்து பணிகளை தரமாகவும், விரைவாகவும் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அறிவுறுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் பரிமளம், கோட்டப் பொறியாளர் (நபார்டு மற்றும் கிராம சாலைகள் திருச்சி) பெ.வடிவேல், நெடுஞ்சாலைத் துறை (கட்டுமானம் மற்றும் பராமரிப்பு) கோட்டப் பொறியாளர் உத்தண்டி, ஊரக வளர்ச்சித் துறை செயற்பொறியாளர் பிரபாகர், நெடுஞ்சாலைத்துறை நபார்டு உதவிக் கோட்டப் பொறியாளர் அரியலூர் வி.பி.சரவணன், உதவி பொறியாளர் ராஜா, உதவி கோட்டப் பொறியாளர் கருணாநிதி, உதவி பொறியாளர்கள் விக்னேஷ், முரளிதரன், ஆண்டிமடம் வட்டாட்சியர் இளவரசன், வட்டார வளர்ச்சி அலுவலர் ஸ்ரீதேவி ஊராட்சிமன்றத் தலைவர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.