BREAKING NEWS

அரியலூர் மாவட்டம் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

அரியலூர் மாவட்டம் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில்மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஜா.ஆனி மேரி ஸ்வர்ணாஅவர்கள் தலைமையில் இன்று (14.08.2023) நடைபெற்றது.

 

இக்கூட்டத்தில், முதியோர் உதவித் தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, மாற்றுத்திறனாளி உதவித்தொகை, தொழில்கடன், பசுமை வீடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 286 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் பெறப்பட்டு, இம்மனுக்கள் மீது சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது.

மேலும், இக்கூட்டத்தில் சமூக பாதுகாப்புத் திட்டத்தின் மூலம் முதலமைச்சர் பொது நிவாரண நிதியின் கீழ் 02 பயனாளிகளுக்கு தலா ரூ.1 இலட்சம் வீதம் என மொத்தம் ரூ.2 இலட்சம் மதிப்பில் இறப்பு நிவாரணத் தொகைக்கான காசோலைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா அவர்கள் வழங்கினார்.

இக்கூட்டத்தில், தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) த.இளங்கோவன்மாவட்ட வழங்கல் அலுவலர் ராமலிங்கம் மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

அரியலூர் செய்தியாளர் D வேல்முருகன்.

Share this…

CATEGORIES
TAGS