அரியலூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் ஊர்க்காவல் படை தேர்வு முகாம் நடைபெற்றது.
கடந்த மாதம் ஊர்க்காவல் படையில் 28 காலி பணி இடங்களுக்கான விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டது. இதனை அடுத்து 06.10.2023 அன்று அரியலூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் சேர்ப்பு முகாம் நடைபெற்றது.
இதனை அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் K.பெரோஸ் கான் அப்துல்லா அவர்கள் உத்தரவின் படி அரியலூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அந்தோணி ஆரி, காவல் துணைக் கண்காணிப்பாளர் வெங்கடேசன் (SJHR) மற்றும் ஊர்க்காவல் படை வட்டார தளபதி ஜீவானந்தம் மேற்பார்வையில் முகாம் நடைபெற்றது.
முகாமில் கலந்து கொண்ட ஆண்கள் 114 பேர் மற்றும் பெண்கள் 9 பேர் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் உடற்கூறு அளத்தல் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து ஆண்களுக்கு உயரம் மற்றும் மார்பு அளவிடும், பெண்களுக்கு உயரம் அளவிடும் செய்யப்பட்டது. அரியலூர் மாவட்ட ஆயுதப்படை உதவி ஆய்வாளர்கள் மற்றும் ஊர்க்காவல் படை அதிகாரிகள் உடல் தேர்வு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
செய்தியாளர் வேல்முருகன்.