அருள்மிகு கொங்கூர் காளியம்மன் கோவில் தல வரலாறு நூல் வெளியீட்டு விழா.!

கொங்கு நாட்டில் தலைநகராக விளங்கிய திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வட்டம் கொங்கூரில் அருள் பாலிக்கும் அன்னை உக்கிர காளியம்மன் திருக்கோவில் திருக்குட நன்னீராட்டு திருவிழாவை முன்னிட்டு வரலாற்றுச் சான்றுகளுடன் கல்வெட்டு செய்திகள் செப்பேடுகள் ஆகியவற்றின் ஆதாரங்களை வைத்து,
சத்தியமங்கலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ் துறை கௌரவ விரிவுரையாளர் முனைவர் எண்ணம் மங்கலம் பழநிசாமி எழுதிய கொங்கூர் உக்கிர காளியம்மன் தல வரலாறு என்ற நூல் பழனியில் இயங்கி வரும் வேல் கல்வியல் கல்லூரியின் தலைவர் கல்வியாளர் ஏ எம் குப்புசாமி அவர்கள் முன்னிலையில்,
திருக்கோவில் நிர்வாகிகள் தலைமையில் பேரூர் ஆதீனம் தவத்திரு மருதாச்சல அடிகளார் நூலை வெளியிட்டார் கொங்கு அறக்கட்டளை நிர்வாகிகள் பெற்றுக் கொண்டனர்.
அந்தியூர் செய்தியாளர் பா..ஜெயக்குமார்.
CATEGORIES ஆன்மிகம்
TAGS அன்னை உக்கிர காளியம்மன் திருக்கோவில் திருக்குட நன்னீராட்டு திருவிழாஆன்மிகம்ஈரோடுஈரோடு மாவட்டம்கொங்கூர்சத்தியமங்கலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ் துறைதமிழ்நாடுதலைப்பு செய்திகள்தாராபுரம் வட்டம்முக்கிய செய்திகள்