BREAKING NEWS

அருள்மிகு ஸ்ரீ பூர்ண புஷ்கலா சமேத ஸ்ரீ அயனார் திருக்கோவில் மகா கும்பாபிஷேகம் விழாவில் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

அருள்மிகு ஸ்ரீ பூர்ண புஷ்கலா சமேத ஸ்ரீ அயனார் திருக்கோவில் மகா கும்பாபிஷேகம் விழாவில் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கோவில்பட்டி அருகே அருள்மிகு ஸ்ரீ பூர்ண புஷ்கலா சமேத ஸ்ரீ அயனார் திருக்கோவில் மகா கும்பாபிஷேகம் விழாவில் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே பிள்ளையார் நத்தம் கிராமத்தில் அமைந்துள் உள்ள அருள்மிகு கன்னிமூல விநாயகர், அருள்மிகு ஸ்ரீ பூர்ண புஷ்கலா சமேத ஸ்ரீ அயனார், ஸ்ரீ கருப்பசாமி ஸ்ரீ பேச்சியம்மாள் ஸ்ரீ மொட்டையசாமி, திருக்கோவில் மகா கும்பாபிஷேகம் விழா நடைபெற்றது.

 

 

7 ஆம் தேதி அன்று மகா கும்பாபிஷேகம் காப்பு கட்டுதல் கும்பத்தில் தீர்த்தத்தை நிரப்பப்பட்டு கோயில் வலம்வந்து யாகசாலையில் எழுந்தருள மற்றும் யாகசாலையில் தீர்த்துக் குடங்களுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.

 

இதனைத் தொடர்ந்து இன்று ஸ்ரீ சங்கரராம ஐயங்கார், தலைமையில் இன்று திருக்கோயில் அதிகாலை 4.00 மணிக்கு திறக்கப்பட்டு விக்னேஸ்வர பூஜை, சண்முக ஜபம் மற்றும் சிறப்பு பூஜைகளும், கணபதி ஹோமம், தன பூஜை, நவக்கிரக பூஜை, கோ பூஜை, யாகசாலை பூஜைகள் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன.

 

 

மேளதாளங்கள் முழங்க யாகசாலையில் இருந்து தீர்த்த குடங்கள் சிறப்பு பூஜை செய்யப்பட்டு, திருக்கோவில் பிரகாரம் வழியாக எடுத்து வந்து கோபுர கலசத்துக்கு புனித நீரால் அபிஷேகம் செய்யப்பட்டது.

 

இதனைத் தொடர்ந்து மூலஸ்தானத்தில் அருள்மிகு ஸ்ரீ பூர்ண புஷ்கலா சமேத ஸ்ரீ அயனார் சுவாமி 21 அபிஷேக சிறப்பு பூஜைகள், சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.

 

 

இந்நிகழ்ச்சியில் முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியில் குருவிகுளம் ஊராட்சி ஒன்றிய தலைவர் விஜயலட்சுமி கனகராஜ், ஆவின் கூட்டுறவு சங்க தலைவர் தாமோதரன், நகர மன்ற உறுப்பினர் கவியரசன்,

முன்னாள் ஒன்றிய செயலாளர் போடு சாமி,தொழிலதிபர் குருசாமி, சுப்பாராவ், முருகன், கோபி, கேண்டீன் நைனா,உள்ளிட்ட அப்பகுதி மக்கள் பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )