BREAKING NEWS

அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு உடற்பயிற்சி பரிசோதனை தொடங்கியது.

அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு உடற்பயிற்சி பரிசோதனை தொடங்கியது.

மதுரை மாவட்டம்,

உலகப்புகழ் பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழா வருகின்ற 16, 17ம் தேதிகளில் அரசு வழிகாட்டுதல் படி நடைபெற உள்ளது. இதனையொட்டி அலங்காநல்லூர், பாலமேடு ஜல்லிக்கட்டு விழா ஏற்பாடுகள் மும்முறமாக நடைபெற்று வரும் நிலையில் ஜல்லிக்கட்டில் களமிறங்கும் காளைகள் மருத்துவ பரிசோதனை இன்று தொடங்கியது.

 

 

அலங்காநல்லூர் அரசு கால்நடை மருத்துவமனையில் கால்நடைத்துறை உதவி இயக்குனர் ரவிச்சந்திரன் தலைமையில் கால்நடை உதவி மருத்துவர்கள் விவேக், மெர்லின், ஆகியோர் காளைகளை பரிசோதனை செய்து உடற்தகுதி சான்றுகளை வழங்கினர்.

 

இதற்காக காலை முதலே அலங்காநல்லூர் கால்நடை மருத்துவமனை முன்பாக காளை உரிமையாளர்கள் சுமார் 100க்கும் மேற்பட்டோர் குவிந்தனர். காளை உரிமையாளர்கள் தங்களது காளைகள் பற்றிய விபரங்கள் ஆதார் அட்டை, புகைப்படம் கொண்டு வந்து பதிவு செய்து தகுதி உள்ளவர்களுக்கு சான்று வழங்கினர்.

 

 

காளைகள் 3 வயது முதல் 7 வயதிற்குள் இருக்க வேண்டும். தேவையான அளவு உயரம் மற்றும் அதற்கேற்ற எடை, திமிலின் அளவு, கொம்பின் கூர்மை உள்ளிட்டவை பரிசோதனை செய்து தகுதியான காளைகளுக்கு மருத்துவர்கள் சான்றிதழ் வழங்கினர்.

 

CATEGORIES
TAGS