அலங்காநல்லூர் அருகே ஒரு மாணவர் ஒரு மரம் நடுதல் திட்டம் – 250 மரக்கன்று நடும் விழா.

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே வெளிச்சநத்தம் ஊராட்சியில் மதுரை எங் இந்தியன்ஸ் அமைப்பு மற்றும் டோக் பெருமாட்டி கல்லூரி என்.எஸ்.எஸ் மாணவர்கள் இணைந்து ஒரு மாணவர் ஒரு மரம் நடுதல் திட்டத்தின் கீழ் 250 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
காலநிலை, பருவநிலை மாற்றத்தின் காரணமாக ஏற்படும் சுற்றுச்சூழல் இடர்பாடுகளை போக்கவும் மண் வளத்தை பாதுகாக்கவும், ஒரு மாணவர் ஒரு மரம் நட்டு பராமரித்தல் திட்டம் மூலம் 250 மரக்கன்றுகள் நடப்பட்டது.
மேலும் ஒவ்வொரு மாணவருக்கும் ஒரு மரம் உரிமை என்பதை வலியுறுத்தும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு மரக்கன்றுகள் நடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் டோக் பெருமாட்டி கல்லூரி முதல்வர் கிறிஸ்டியனா சிங், துணை முதல்வர் பியூலா ஜெயஶ்ரீ,
நிதியாளர் வனிதா மலர்விழி, மதுரை எங் இந்தியன் சேர்மன் சர்மிளா தேவி, காலநிலை பருவநிலை மாற்றம் சேர்மன் பொன் குமார், சரவணன், மற்றும் கல்லூரி ஆசிரியர்கள், நட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.