BREAKING NEWS

அழுகிய நெற் பயிர்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகாரளிக்க வந்த விவசாயிகள்.

அழுகிய நெற் பயிர்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகாரளிக்க வந்த விவசாயிகள்.

தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகேயுள்ள பந்தாரஹள்ளி ஏரியானது சமீபத்தில் பெய்த மழையால் நிரம்பியிருக்கிறது, ஏரியிலிருந்து உபரி நீர் வெளியேறக்கூடிய ஏரி கோடி பகுதி தடுப்பணை சுவரின் உயரத்தினை ஒன்றரை அடி அளவிற்கு சமீபத்தில் உயர்த்தி கட்டியதால் ஏரியில் கூடுதலான அளவிற்கு தண்ணீர் நிரம்பியதாகவும்,

 

 

இதனால் ஏரிக்கு அருகே தாழ்வான பகுதியாக உள்ள கீழ் சவுளுப்பட்டி கிராமத்தில் விளைநிலங்களில் தண்ணீர் புகுந்தது, தண்ணீர் வெளியேற வடிகால் வசதி இல்லாததால் அறுவடைக்கு தயாராக இருந்த நெல், அவரை, உள்ளிட்ட விளை பயிர்கள் பயிரிட்டிருந்த தண்ணீரில் அழுகி பெருத்த இழப்பு ஏற்பட்டிருப்பதாக வேதனை தெரிவிக்கும் விவசாயிகள்,

 

 

இது தவிர விவசாய கிணறுகளில் சரிவு ஏற்பட்டதால் மின் மோட்டார்கள், ஆயில் இன்ஜின்கள் தண்ணீருக்குள் மூழ்கி பல்வேறு வகையில் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது.

 

 

என வேதனை தெரிவிக்கும் அப்பகுதி விவசாயிகள், விளை நிலங்களுக்குள் மீண்டும் தண்ணீர் புகுந்துவிடாதபடி ஏரி கோடியின் தடுப்பணையின் உயரத்தை குறைத்து கட்ட நடவடிக்கையும், தங்களுக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்பிற்கு இழப்பீடு வழங்க வேண்டுமெனவும்,

 

அழுகிய நெற்பயிர்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் புகாா் அளித்தனர், இது தொடர்பாக காரிமங்கலம் பி டி ஓ அலுவலகம், காரிமங்கலம் வட்டாச்சியர், மாவட்ட வருவாய் அலுவலகத்திலும்,

 

 

புகார் மனு கொடுத்திருப்பதாகவும் தங்களுக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்பிற்கு தருமபுரி மாவட்ட நிர்வாகம், தமிழக அரசும் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுப்பதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர்.

 

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அழுகிய நெற்பயிர்களுடன் விவசாயிகள் புகார் மனு அளிக்க வந்த சம்பவம் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )