அவிநாசி ரோடு பகுதிகளில் இந்து முன்னணி கொடிகளை நேற்று இரவு காவல்துறையினர் அகற்றியதால் ரயில் நிலையம் அருகே டவரில் ஏறி நிர்வாகிகள் கொடி ஏந்தி போராட்டம்.

திருப்பூர் அவிநாசி ரோடு பகுதிகளில் இந்து முன்னணி கொடிகளை நேற்று இரவு காவல்துறையினர் அகற்றியதால் ரயில் நிலையம் அருகே டவரில் ஏறி நிர்வாகிகள் கொடி ஏந்தி போராட்டம் ..
திருப்பூரில் 1200 க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலை வைக்கப்பட்டுள்ளது இன்று விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு நேற்று அனைத்து பகுதிகளிலும் இந்துமுன்னணி கொடிகள் கட்டப்பட்டது.
அவிநாசி ரோடு பகுதிகளில் கட்டப்பட்டுள்ள கொடிகளை காவல்துறையினர் அகற்றி எடுத்துச் சென்றதால் , ரயில் நிலையம் அருகே டவர் லயனில் ஏறி நிர்வாகிகள், இந்து முன்னணி கொடியை பிடித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
காவல்துறையினர் சமாதானத்தில் ஈடுபட்டுள்ளனர் இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
CATEGORIES திருப்பூர்