ஆக்கிரமிப்புகளை அகற்றி ஊரணியை சீரமைக்க வேண்டும்: கிராம மக்கள் கோரிக்கை!
தூத்துக்குடி; ஒட்டுடன்பட்டி கிராமத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றி ஊரணியை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரடம் கிராம மக்கள் சார்பில் அளித்துள்ள மனுவில் “அக்காநாயக்கன்பட்டி பஞ்சாயத்து ஒட்டுடன்பட்டி கிராமத்தில் பிள்ளையார் கோவில் ஆக்கிரமிப்பு நிலத்தில் உள்ளது.
தற்போது ஊரணி சீரமைக்கும் பணி நடைபெற்று வரும் நிலையில் ஆக்கிரமிப்பை அளவீடு செய்து ஊரணியை அகலப்படுத்தியும் பிள்ளையார் கோவிலை சுற்றி முள்வேலி அமைக்க இருப்பதால் மேற்கண்ட இடத்தை அளவீடு செய்து தர வேண்டும்” என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
CATEGORIES தூத்துக்குடி
TAGS ஊரணி சீரமைக்க நடவடிக்கைஒட்டுடன்பட்டி கிராம ஆக்கிரமிப்புகளை அகற்றி ஊரணியை சீரமைக்க நடவடிக்கைதமிழ்நாடுதலைப்பு செய்திகள்தூத்துக்குடி மாவட்டம்முக்கிய செய்திகள்