ஆக்கூர் ஊராட்சியில் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம் குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு.
மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார் கோயில் ஊராட்சி ஒன்றியம் ஆக்கூர் ஊராட்சியில் மாஸ் திருமண மண்டபத்தில் ஆக்கூர், மடப்புரம், காலஹஸ்திநாதபுரம், திருக்கடையூர், காழியப்பநல்லூர், கிடங்கல், ஆகிய ஊராட்சிகளில் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்படாமல் உள்ள நிலவரம் குறித்து உள்ளாட்சி அமைப்பு பிரதி நிதிகள் மற்றும் பயனாளிகளுடன் மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது .
முன்னதாக ஆக்கூர் ஊராட்சி, உடையார்கோவில்பத்து பகுதியில் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் ரூபாய் 2.40 லட்சம் செலவில் நடைபெற்றுபணிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இக்கூட்டத்தில் ஊரக வளர்ச்சி துறை இனைஇயக்குனர் ஸ்ரீலேகா, ஊரக வளர்ச்சித் துறை செயற் பொறியாளர் செந்தில்குமார், உதவி இயக்குனர் மஞ்சுளா, செம்பனார் கோயில் ஒன்றிய குழு தலைவர் நந்தினி ஸ்ரீதர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விஜயலட்சுமி, மீனா, ஊரக வளர்ச்சித் துறையினர், ஊராட்சி மன்ற தலைவர்கள் சந்திரமோகன், கருணாநிதி ஜெயமாலதி சிவராஜ், செல்வநாயகம், மோகன் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், பயனாளிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.