ஆடிப்பூர கஞ்சிக்கலய தீச்சட்டி ஊர்வல நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் இராஜகோபாலபுரம் இராஜ அக்ரகாரத்தில் அமைந்துள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் சார்பாக அருள் திரு அடிகளார் 82 வது அவதார திருநாளினை முன்னிட்டு ஆயிரம் ஆடிப்பூர கஞ்சிக்கலய தீச்சட்டி ஊர்வல நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது குத்தாலம் பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள ஸ்ரீ மன்மதீஸ்வரர் கோவிலில் இருந்து பம்பை மேளம் முழங்க ஊர்வலமாக புறப்பட்டு வழிபாட்டு மன்றத்தை வந்து அடைந்தனர் பின்னர் வந்திருந்த பக்தர்கள் அனைவருக்கும் கஞ்சிவாத்தல் நிகழ்ச்சியும் அதனைத் தொடர்ந்து ஆயிரம் பேருக்கு அன்னதானமும் நடைபெற்றது இதில் பெருந்திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபாடு செய்தனர் இந்நிகழ்ச்சிக்கு இராஜகோபாலபுரம் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தினர் சார்பாக சிறப்பாக ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.
CATEGORIES மயிலாடுதுறை
